அரக்கோணம், ஜன. 23- அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவின் போது கிரேன் சரிந்து விழுந்ததில் பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந் துள்ள நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி கீழவீதி கிராமத்தில் மண்டியம் மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (22.1.2023) இரவு மயிலேறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ராட்சச கிரேன் வரவழைக்கப் பட்டு அதில் கொக்கி மாட்டி தொங்கியபடி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள் ளானது.
இதில் கிரேனில் தொங்கியவர்கள் கிழே விழுந்து பலமான காயம் அடைந்தனர். கீழே இருந் தவர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியா கினர். மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந் தனர். காயம் அடைந்த வர்கள் புன்னை மருத்துவ மனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவம னைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட் டனர். அவர்களில் சில ருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின் றனர். சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment