2023ஆம் ஆண்டின் முதல் கூட்டம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

2023ஆம் ஆண்டின் முதல் கூட்டம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றினார்

அரசமைப்பு சட்டத்தை மதிக்காத ஆளுநருக்குக் கண்டனம்

‘ஆளுநரே வெளியேறு!' என்ற முழக்கம் - வெளிநடப்பு

சென்னை, ஜன. 9- தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அரசமைப்புச் சட் டத்தை மதிக்காமல் செயல்பட்டு வரும் ஆளுநரை கண்டித்து அவையில் ஒலி முழக்கம் - வெளிநடப்பு நடை பெற்றது.

2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் இன்று (9.1.2023) காலை 10 மணிக்கு தொடங்கியதும் பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வணக்கம் தெரிவித்தனர். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தனது ஆங்கில உரையை நிகழ்த்தினார். 

ஆளுநரைக் கண்டித்து 

ஒலி முழக்கம்

ஆளுநர் தனது உரையைத் தொடங் கியதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கள், பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து ஆளுநர் இருக்கைக்கு முன்பு வந்து தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரா கவும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருவதற்கும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்காத ஆளுநரை கண்டித்து ஒலி முழக்கங் களை எழுப்பினர். பின்னர் வெளிநடப்பு செய்தனர் - "ஆளுநரே வெளியேறு!" என்ற முழக்கம் மன்றத்தையே அதிரச் செய்தது.

இதையடுத்து ஆளுநர் தனது ஆங்கில உரையை முடித்தவுடன் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆளுநரின் ஆங்கில உரையை தமிழில் வாசித்தார்.

No comments:

Post a Comment