திருப்பதி கோயிலில் சுப்ரபாதத்திற்கு கெட்அவுட் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

திருப்பதி கோயிலில் சுப்ரபாதத்திற்கு கெட்அவுட்

திருமலை,டிச.13- திருப்பதி ஏழுமலையானுக்கு அதிகாலை சுப்ரபாத சேவை நடத்துவது அய்தீகம். ஆனால், தமிழ் மாதமான, மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை நடத்தப்படும். 

இதனையொட்டி, இம்மாதம் 16ஆம் தேதி மார்கழி மாதம் தாமதமாக பிறப்பதால், மறுநாள் 17ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை திருப்பாவை சேவை நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டம் சார்பில் நாடு முழுவதிலும் உள்ள 250 வைணவ கோயில்களில் திருப்பாவை மற்றும் 12 ஆழ்வார்களின் மகிமைகள் குறித்து மார்கழி மாதம் முழுவதும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment