பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின்படி இரட்டையாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு நூறாண்டுகளாகிவிட்டன. அப்புதிய நடைமுறையின் வழியே, திராவிட இயக்கத் தின் முன்னோடியான நீதிக் கட்சி சட்டமன்றத் தேர் தலில் தனிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிப் பொறுப்புக்குவந்து நூறாண்டுகள் கடந்துள்ளது
அதிகாரப் பிரிவினைக் கோட்பாடுகளின்படி சட்ட மியற்றும் அவைக்கும்நிர்வாகத் துறைக்கும் இடையிலான உறவில் அவை ஒவ்வொன்றும் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்துக்கும் சுய கட்டுப்பாடுக ளுக்கும் தமிழகம் இன்றளவும் முன்னுதாரணமாக விளங்கிவருகிறது. அதற்கு 1920,டிசம்பர் 17 அன்று சென்னை மாகாணத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட நீதிக் கட்சியின் முதலாவது அமைச்சரவையும் அன்றைய ஆளுநர் வெல்லிங்டனும் பதித்துச்சென்ற வரலாற்றுத் தடங்களுக்கு முக்கியப் பங்குண்டு.

No comments:
Post a Comment