ஆளுநர் நியமனம் - வரையறை தேவை மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

ஆளுநர் நியமனம் - வரையறை தேவை மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை டிச. 4- மகாராட்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ் யாரி அடிக்கடி தாறுமா றாகப் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத் தில் அவுரங்காபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜியை அவ மதிக்கும் வகையில் பேசி னார். 

அவரது பேச்சுக்கு மராட்டியத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் பா.ஜனதாவுக்கு சாதகமாக நடந்து கொள் வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்ற னர். இந்த நிலையில் சிவ சேனா, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின் றன. மேலும் ஆளுநருக்கு எதிராக பல்வேறு இடங் களில் மராத்தா அமைப்பி னர், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட் டன.

இந்த விவகாரம் தொடர்பாக பால் தாக் கரே சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறிய தாவது:- ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிபாய் புலே, சாவித் திரிபாய் புலே ஆகியோரை அவமதித்து உள்ளார். மாநில முதலமைச்சர் ஏக் நாத் ஷிண்டேவின் துரோகத்தை, சத்ரபதி சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பித்து வந்ததுடன் ஒப்பிட்டு பேசுகிறார். இதுபோன்றவர்கள் தங் கள் பதவியில் தொடர்ந்து வருகின்றனர். ஆளுநர் இந் திய குடியரசுத் தலைவரின் பிரதிநிதி. எனவே யாரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என வரையறை இருக்க வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment