சேலம்,டிச.21- வரலாற்றை மாற்றி எழுதச் சொல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, அது இன அழிப்புக்கு சமமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அளித்த பேட்டி: வடமாநிலங்களில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிந்து பிரதமர் மோடி திறந்து வைத்து விட்டார். ஆனால், மதுரையில் செங்கலை கூட வந்து இறக்கவில்லை. தமிழ்நாடு பாஜவினர் இதுகுறித்து ஏன் கேள்வி எழுப்ப வில்லை. தான் ஒரு ஏழை விவசாயி என்று கூறும் அண்ணாமலை, ரூ.3.5 லட்சம் மதிப்பிலான ரபேல் வாட்ச் கட்டியுள்ளதாக கூறியுள் ளார். இதற்கு ரசீது காட்டுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டிருக்கிறார். அந்த ரசீதை அண்ணாமலை காட்ட வேண் டியது தானே.
இந்திய வரலாற்றை பொறுத்தவரை, அப்போது வாழ்ந்த மக்கள் எதை குறிப் பிட்டு உள்ளார்களோ அதுதான் வரலாறு. மாற்றி எழுதினால் அது வரலாறு அல்ல. திரித்து எழுதுகிறார்கள் என்பது தான் பொருள். பங்கு இல்லாதவர்கள் பெயர்களை எழுத வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி சொல்கிறார். வரலாற்றை மாற்றி எழுதுவது இன அழிப்பிற்கு சமமானது. தமிழ்நாடு அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. நடிகர் கமல் தேசிய உணர்வு படைத்தவர். அவருடைய நட்பை வரவேற்கிறோம். மக்களிடையே செல்வாக்கு பெற்ற அவர், ராகுல் காந்தியுடன் நடைப்பயணம் செல்வதை வரவேற்கிறோம். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

No comments:
Post a Comment