தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவருடைய வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் பொன்னாடை அணிவித்தார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். உடன் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 2.12.2022).
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து!