"உதயநிதி என்றால் 5ஜி வேகம்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 3, 2022

"உதயநிதி என்றால் 5ஜி வேகம்!"

கழகத் தலைவரைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வாழ்த்துரை வழங்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

இன்று (3.12.2022) காலை 11.30 மணியளவில் தமிழர் தலைவரை சந்தித்து தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு  பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைக் கூறினார். 

உதயநிதிக்குக் கழகத் தலைவர் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களையும் வழங்கினார். கழகத் தலைவரின் 90ஆம் ஆண்டு 'பிறந்த நாள் விடுதலை மலரை' கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வழங்கினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோரும் உடனிருந்து வரவேற்றனர். தி.மு.க. இளைஞரணியின் செயல்பாடு மிகவும் சிறப்பு என்றும், அதிலும் பாசறைப் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடு சிறப்பானது என்றும் கழகத்தலைவர் பாராட்டினார். 

5ஜி போன்ற வேக செயல்பாட்டைத் தங்களிடம் காண்கிறேன் என்றும் பாராட்டினார் கழகத் தலைவர். திராவிடத்தின் அய்ந்தாம் தலைமுறை என்ற பொருளும் அடக்கம்.  

திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கழகத் தலைவர் கூறிட மகிழ்ச்சியுடன் உதயநிதி ஏற்றுக் கொண்டார்.


No comments:

Post a Comment