கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் - 1000 பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் - 1000 பரிசளிப்பு விழா

கல்லக்குறிச்சி, டிச. 4- கல்லக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ.கே.டி. கூட்டரங்கில் 21.11.2022 அன்று மாலை 4.30 மணிக்கு கல்லக் குறிச்சி மாவட்டத்தில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பெரியார் - 1000 தேர்வு, பெரியார் மணியம்மை பல் கலைக்கழகமும், பெரியார் சிந் தனை உயராய்வு மய்யமும் நடத் தியது.

விழுப்புரம் மண்டல கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில மருத்துவரணி செயலா ளர் மருத்துவர் கோ.சா. குமார், மாவட்ட தலைவர் ம.சுப்பரா யன், பொதுக்குழு உறுப்பினர் த.பெரியசாமி, மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் வீ.முருகேசன், மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் சி.முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

கல்லக்குறிச்சி மாவட்ட செயலாளர் ச.சுந்தரராஜன் வர வேற்புரை ஆற்றினார். பெரியார் -1000 தேர்வு எழுதிய 31 பள்ளி களின் ஆசிரியர்கள், மாணவர் கள் பங்கேற்ற இவ்விழாவில் தலைமை வகித்து பேசினார். 

மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000 அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவி டி.சோனாலிசா பெற்றார். இரண்டம் பரிசினை மு.வான் மதி, மூரார்பாளையம் அரசினர் மேனிலைப் பள்ளி மாணவி ரூ.3000 பெற்றார். மூன்றாம் பரிசினை அரசினர் மேனிலைப் பள்ளி மாணவி கீழ்ப்பாடி கே.சுவேதா பெற்றார்.

பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் களுக்கு முறையே தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம், வெண்கலப் பதக்கம் அணிவித்து புத்தகங்க ளும் பரிசாக அளிக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகம் வழங் கப்பட்ட பெரியாரின் படம் நன் கொடையாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியர் கள், பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் விழுப்பு ரம் மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் திராவிடப்புகழ், கல்லக்குறிச்சி மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட கழக மகளிரணித் தலைவர் பழனியம் மாள் கூத்தன், மாவட்ட கழக இலக்கிய அணித் தலைவர் செ.சயராமன், கல்லக்குறிச்சி நகர கழக செயலாளர் நா.பெரியார், மாவட்ட கழக இளை ஞரணித் தலைவர் அ.கரிகாலன், செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லை நகரத் தலைவர் 

இரா.முத்துசாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment