மோர்பி: ஒரு தாயின் வேதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

மோர்பி: ஒரு தாயின் வேதனை!

குஜராத்தில் பாலம் அறுந்து 150க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். இதில் காணாமல் போனவர்களைத் தேடிய தாயின் நேரடி அனுபவத்தை `தைனிக் பாஸ்கர்' என்ற நாளிதழ் வெளியிட்டிருந்தது, ஹிந்தியில் வந்த செய்தியின் தமிழாக்கம் இதோ:

மோர்பி: ஒரு தாயின் வேதனையான கதை - பிணவறை யில் காயங்களுடன் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட மகன். எரிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

இறந்தவர்களுடன், காயமடைந்தவர்களின் உடல்களும் பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த வழக்கு குஜராத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. "குல்ஷன்  ரத்தோட்" என்ற பெண் தனது உயிரோடு இருந்த மகன்களை மோர்பி சிவில் மருத்துவமனையில் பிணவறையில் இருந்து வெளியே எடுத்துள்ளார். பல மணி நேரம் தேடியும் மகன்களை கண்டுபிடிக்க முடியவில்லை. தாய் தனது மகன்களைத் தேடி மருத்துவமனையின் பிணவறையை அடைந்தார்.

18 மற்றும் 20 வயது மகன்கள் இறந்த உடல்களுக்கு மத்தியில் கிடப்பதைப் பார்த்து, அவர்கள் ஒருமுறை நம்பிக்கை இழந்திருக்க வேண்டும். ஆனால், மகன்களின் அசையும் மூச்சைப் பார்த்த ரத்தோர் மீண்டும் மனதை திடப்படுத்திக் கொண்டார். இந்த முழு விபரமும் 'குஜராத் மாடல்' தோல்விக்கு ஒரு உதாரணம். அரசு மருத்துவ மனையின் இந்த பொறுப்பற்ற செயல் காரணமாக, இரண்டு பேர் இறந்திருக்கலாம். உண்மையில் எத்தனை பேர் இப்படி உயிரோடு பிணவறையில் வைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருப் பார்கள் என்ற அய்யம் எழுகிறது

காயப்பட்ட உயிருள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் பிணவறையில் மூடி வைக்கப்பட்டனர் என்பது சாதாரணமாக கடந்துபோகும் ஒன்றல்ல. இது அம்மாநில மருத்துவமனையின் அலட் சியத்தை படம் போட்டுக் காட்டும் ஒன்று. ஆனால், இது குறித்து இன்றுவரை யாருமே பேசவில்லை. 

No comments:

Post a Comment