வெளியே மேக் இன் இந்தியா - உள்ளே மேட் இன் சைனா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

வெளியே மேக் இன் இந்தியா - உள்ளே மேட் இன் சைனா!

அம்பானியின் `ஜியோ புக்' என்ற `லாப்டாப்' தொடர்பாக அதன் பயனாளிகள் கடுமையான அதிருப்தியை தெரிவித் துள்ளனர்.  அம்பானி `ஜியோ புக்' என ரூ.18 ஆயிரத்துக்கு படுகேவலமாக ஒரு லாப்டாப் வெளியிட்டுள்ளனர். அதன் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் எல்லாமே படு மோசம்.  நாடாளு மன்ற தேர்தலுக்கு இளைஞர்களின் வாக்குகளைப் பெற இந்த `லாப்டாப்'பை மோடி அரசு மொத்தமாக வாங்கி ஏதாவது திட்டத்தில் மக்கள் தலையில் கட்டிவிடும்.

மோடியுடைய `மேக் இன் இந்தியா' திட்டத்தில் தயாரித்தது மாதிரி வெளியே "Made in India".. ஆனால், உள்ள இருக்கும் எல்லா பாகங்களும் சீனத் தயாரிப்பு. அம்பானியுடைய `ஜியோ புக்' லாப்டாப்-பில் நாம் பிரவுசர் கொண்டு எதுவும் பார்க்க முடியாது.  கூகிள் பக்கங்களில் அதன் பயன்பாட்டை நாம் பயன்படுத்த முடியாது. `ஜூம்', `கூகிள் மீட்' என எதுவுமே செய்யமுடியாது. காரணம் எந்த மென்பொருளும் தரவிறக்கம் செய்து அதை பயன்படுத்த முயன்றால், அட்மின் கண்ட்ரோல் அதை தடுத்துவிடும். அதாவது நாம் பணம் கொடுத்து வாங்கினாலும், தேர்தலுக்காக மோடி அரசு கொடுத்தாலும் அந்த `லாப்டாப்'பிற்கு  நீங்க அட்மின் இல்லை. ஜியோ-தான் அட்மின். அப்படியென்றால் ஒவ்வொரு சேவைக்கும் ஜியோ நிறுவன மென்பொருளை பயன்படுத்தவேண்டும். அதற்குத் தனியாக கட்டணம் கட்டவேண்டும். 

 மோடி அரசு ஒருவேளை இதை தேர்தல் உத்தியாக கட்டணமின்றி கொடுத்தாலும் அதில் பாட்டு கேட்க வேண்டுமென்றால் கூட அதற்கான மென்பொருளை இன்ஸ்டால் செய்ய பணம் கொடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment