தந்தை பெரியார் பொன்மொழிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 18, 2022

தந்தை பெரியார் பொன்மொழிகள்

சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த ஜாதிப் போராட்டமும் ஆகும். 

 திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், இலட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.

No comments:

Post a Comment