Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெண்களை இழிவுபடுத்திய சாமியார் ராம்தேவ்! : பகிரங்க மன்னிப்பு கேட்டார்
November 29, 2022 • Viduthalai

மும்பை, நவ 29 பெண்களின் அழகு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு  மன்னிப்பு கோரியுள்ளார்.

மும்பை புறநகர் தானேவில் கடந்த 25.11.2022 அன்று பதஞ்சலி யோகா மய்யம், மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி ஆகியவை இணைந்து யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டத்தை நடத் தியது. இந்த  யோகா நிகழ்ச்சியில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கலந்துகொண்டார். அவருடன், மகா ராட்டிர முதலமைச்சர் ஏக்நாத் சிண்டேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீகாந்த் சிண்டே, துணை முதல மைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்சின் மனைவி அம்ருதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 யோகா நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாபா ராமதேவ், ‘ பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் ஆடை எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்.’ என கூறினார். மராட்டிய துணை முதலமைச்சரின் மனைவியை அருகில் வைத்துக் கொண்டு பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராம்தேவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. மகாராட்டிரா மாநிலம் மட்டுமின்றி, நாடு முழு வதும் உள்ள பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் ராம்தேவின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், அவர் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர். சில இடங்களில்  பாபா ராம்தேவின் உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், பாபா ராம்தேவ், தனது கருத்து குறித்த  உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மராட்டிய மாநில மகளிர் ஆணையம்  தாக்கீது அனுப்பியது.

இந்த நிலையில், பெண்களின் ஆடை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்கு யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரினார். மின்னஞ்சல் மூலமாக மகாராட்ட்ரா மாநில மகளிர் ஆணையத்திடம் பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரிய தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் னஞ்சல் வாயிலாக தன் வருத் தத்தை பாபா ராம்தேவ் தெரிவித்ததாகவும், மேலும் விழாவில் தான் பேசியது தவ றான முறையில் பரவ விடப்பட்டதாக வும் கடிதத்தில் பாபா ராம்தேவ் கூறியுள்ளதாக மகளிர் ஆணையம் தெரிவித்தது.இதுகுறித்து, மகாராட்டிர மகளிர் ஆணையத் தலைவர் சகங்க ருக்கு, பாபா ராம்தேவ் எழுதியுள்ள கடிதத்தில்,”பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத் தைப் பெற வேண்டும் என்பதற்காக வும், பெண்களை மேம்படுத்துவதற் காகவும் உழைத்து வருகிறேன்.

ஒன்றிய அரசின் பெண்கள் முன் னேற்ற திட்டங்களில் பங்கெடுத்து, என்னால் முடிந்த முயற்சிகளை செய்து அதனை ஊக்குவித்து வரு கிறேன். எனவே, பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை என் பதையும், சமூக ஊடகங்களில் பரப் பப்படும் காட்சிப் பதிவு முழுமை யானது இல்லை என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். 

இருப்பினும், எனது கருத்தால் யாரேனும் புண்பட்டிருந்தால், நான் மிகவும் வருந்துகிறேன். எனது கருத் தால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn