கோவை நிகழ்வில் அரசின் துரித நடவடிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

கோவை நிகழ்வில் அரசின் துரித நடவடிக்கை!


அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என்று கூறும் அண்ணாமலையே, உ.பி. சாமியார் முதலமைச்சருக்கு என்ன அடைமொழி கொடுக்கப் போகிறாய்?

காரில் இருந்த சிலிண்டர் வெடித்த நேரம் அதிகாலை 4:05 மணி

தமிழ்நாடு காவல்துறை வந்த நேரம் 4:15 மணி 

கோவை மாநகர ஆணையர் வந்த நேரம் 4:30 மணி 

காவல்துறை இயக்குநருக்கு தகவல் போன நேரம் 4:45 மணி

முதலமைச்சருக்கு தகவல் சொல்லப் பட்ட நேரம் 4:50 மணி

காவல்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் நிகழ்விடத்திற்கு வந்த நேரம் காலை 11:00 மணி

தடய அறிவியல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் ஆய்வு தொடங்கியது.

குற்றவாளிகள் குறித்த விவரங்கள் கிடைத்த நேரம் இரவு 10:00 மணி

பதிவெண் மற்றும் இதர வாகன அடையாள எண்களை வைத்து 10 கைகள் மாறிய காரின் உரிமையாளரை கண்டறிந்தனர்.

காரை ஓட்டி வந்த நபர் அடையாளம் காணப்பட்டு அவர் வீடு கண்டறியப்பட்டது.

அங்கிருந்த காணொலிக் காட்சிகளை ஆய்வு செய்து, இதில் தொடர்புடைய அய்ந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த நபரின் வீட்டை சோதனை செய்ததில் பல்வேறு வெடிப்பொருட்கள் கைப்பற்றப் பட்டன.

அதில் சம்பந்தப்பட்ட எட்டு நபர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

அதில் மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

தடய அறிவியல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் ஆய்வு தொடங்கியது.

தொடர் விசாரணை - கேரளா வரை விசாரணை நீண்டது.

அடுத்தடுத்த விசாரணைகளில் பன் னாட்டுத் தொடர்புகள் தெரிந்தது.

தடய அறிவியல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் இரண்டு கட்ட ஆய்வு முடிவுகள் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இவையனைத்தும் நடந்து முடிந்தது 48 மணி நேரத்தில்

3ஆம் நாள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது திவிரவாத தடுப்புச் சட்டமான ஹிகிறிகி பிரிவில் வழக்குப்பதிவு.

தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தர விடும்படி முதலமைச்சர் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்தார்!

இந்த நிகழ்வுகள் அனைத்தும் தமிழ்நாட்டின் ஆளுநர் என்ற வகையில் ஆர்.என்.ரவிக்கும் அவ்வப்போது கோவை தொடர்பான அனைத்து விவரங்களும் தெரியப்படுத்தப்பட்டிருக்கும்.

கர்நாடக பா.ஜ.க. அரசு ஊடகவியலாளர்களுக்கு 3 லட்சம் ரொக்கம், ஒரு மது பாட்டில் மற்றும் சில பரிசுப் பொருட்களுடன் தீபாவளிப் பரிசாக அளித்தனர். இந்தப் படத்தை கருநாடக காங்கிரசார் வெளியிட்டனர்.

 அப்படி இருந்தும் ஒன்றிய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பைக் கேள்வி கேட்காமல் கல்லூரி மேடையில் தலைப்பிற்கு தொடர்பே இல்லாத கோவை நிகழ்வைப் பற்றி ஆளுநர் பேசியது எதற்கு என்று பொதுமக்கள் மனதில் கேள்வி ஓடுகிறது. 

இதற்கு விடை - ஆளுநர் அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை எதிர்பார்த்து ஜெய்சங்கர் போல் ஒன்றிய அமைச்சராக ஆசைப்படுகிறாரோ என்னவோ?? 

(சமூக வலைதளங்களிலிருந்து...)


No comments:

Post a Comment