2017 குஜராத் தேர்தலில் வெற்றி எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

2017 குஜராத் தேர்தலில் வெற்றி எப்படி?

அகமதாபாத்,நவ.17- கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த குஜராத் பேரவைத் தேர்தல் செலவு குறித்து மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷி யல் சயின்ஸஸ் (டிஅய்எஸ்எஸ்), அமெரிக்காவைச் சேர்ந்த பில டெல்பியா டெம்பிள் யூனிவர் சிட்டி, நாஷ்வில் வான்டர்பில்ட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2017-ஆம் ஆண்டில் குஜராத் மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. அப் போது தேர்தல் ஆணைய விதி களின்படி வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதிக்கு ரூ.28 லட்சம் மட்டுமே செலவு செய்ய முடியும்.

மேலும் ஒரு வாக்காளருக்கு ரூ.45 வரை மட்டுமே ஒரு வேட்பாளர் செலவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் விதிகளை மீறி ஒரு வாக்காளருக்கு ரூ.459 என்ற அளவில் செலவு செய்யப்பட் டுள்ளது. அதாவது 10 மடங் குக்கும் (1,000%) அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாதிலுள்ள வாலட்சிட்டி தொகுதியிலும், கேடாதொகுதியிலும் இந்த ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அகமதா பாத் வாலட் சிட்டியில் போட்டியிட்ட காங்கிரஸ்வேட்பாளர், தான் அதிகாரப்பூர்வமாக ரூ.13.4 லட்சம் செலவு செய்துள் ளதாகவும், பாஜக வேட்பாளர் தான் ரூ.10.5 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ரூ.2.7 லட்சம் செலவு செய்திருப்பதாக வும் தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டியுள்ளனர்.

மேலும் காப்பட்வன்ச் தொகுதியில் காங்கிரஸ் வேட் பாளர் ரூ.9.7 லட்சமும், பாஜக வேட்பாளர் ரூ.11.8 லட்சம் செலவு செய்துள்ளனர்.

ஆனால் வேட்பாளர்கள் செய்த செலவுகள் குறித்து டிஅய்எஎஸ்எஸ் ஆராய்ச்சியா ளர் அஸ்வனி குமார், டெம்பிள் பல்கலைக்கழகத்தின் சவுரதீப் பானர்ஜி, வான்டர்பில்ட் பல் கலைக்கழகத்தின் சஷ்வத் தர் ஆகியோர் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.

இதன்மூலம் அகமதாபாத், காப்பட்வன்ச் தொகுதிகளில் வேட்பாளர்கள் ஒவ்வொரு வரும் கூட்டம், பேரணி நடத்துவதற்கு ரூ.16 லட்சம் முதல் ரூ.28 லட்சம்வரையும், நட்சத்திர பேச்சாளர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்வ தற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையில் ஒவ்வொரு வரும் ஒரு தொகுதிக்கு தலா ரூ.57 லட்சம் முதல் ரூ.1.16 கோடி வரை செலவு செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டும் போது, செய்த செலவைக் குறைத்து மதிப்பிட்டுக் கணக்குக் காட்டியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment