முடிவெடுப்பதில் தடுமாற்றம் வேண்டாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

முடிவெடுப்பதில் தடுமாற்றம் வேண்டாம்

வாழ்வில் தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ, சமூகம் சார்ந்தோ முடிவுகளை எடுக்கும்போது, அவற்றால் கிடைக்கும் நல்ல பலன் களை மட்டும் கருத்தில்கொள்ள வேண் டும். ஒவ்வொரு முடிவிலும், புதியவற் றுக்கான தொடக்கம் இருக்கும்.

பெரும்பாலும் நம் சமூகத்தில் நீண்ட ஆண்டுகளாக பெண்கள் சுய மாக முடிவெடுக்காமல் ஆண்களை சார்ந்தே இருந்து வந்துள்ளனர். ஆனால் நவீன உலகில் பெண்களின் பங்குமுக்கியத்துவம் பெற்றுவிட்டது. 

 பெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் மிளிர்கின்றனர். இந்த நிலையின் தயக்கம், மற்றும் உடனிருப்பவர்களின் அச்சுறுத்தல் போன்றவை பெண்களை முடிவெடுக்கவிடாமல் தயங்க வைத்துவிடுகிறது

 அந்த வகையில், நாம் எடுக்கும் எந்த முடிவும், புதிய செயல் அல்லது நிகழ்வின் ஆரம்பமாக அமையும்.  எடுக்கும் முடிவுகளின் மூலம் நிகழ விருக்கும் நன்மை-தீமைகளைப் பற்றிய பயம், நம்மை முடிவு எடுக்க விடாமல் தடுக்கும். 

 தெளிவாக சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள், ஒருவரது வாழ்வில் வெற்றிக் கான திருப்புமுனைகளை ஏற்படுத்து கின்றன. அத்தகைய முடிவை எடுக் கும்போது நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க நேரிடலாம். அவற்றை எண்ணி கவலை கொள்ளாமல், தொடர்ந்து பய ணிக்கும்போது நேரம், சூழ்நிலை மற் றும் எண்ண ஓட்டங்களின் மாற்றத்தால் புதிய பாதை உண்டாகும். அப்பாதை யானது நம் வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே சிந்தித்து ஒரு முடிவை எடுத்த பின்பு, எந்தக் கவலையும் இல்லாமல் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒரு வேளை அது தவறாக இருந்தால் திருத் திக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment