வாட்ஸ் அப் செயலியில் ரயில் இருக்கும் இடத்தை இனி பார்க்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

வாட்ஸ் அப் செயலியில் ரயில் இருக்கும் இடத்தை இனி பார்க்கலாம்

நாள்தோறும் ஏராளமானோர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக தொலைதூரங்களுக்கு செல்ல ரயில் சேவையை பயன்படுத்து கின்றனர். காரணம் பேருந்து, விமான சேவையை விட கட்டணம் குறைவு. தேவையான வசதிகள் இருப்பதால் ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்ற னர். தொலைதூரம் செல்ல அய்ஆர் சிடிசியின் இணையதளத்தில் முன் பதிவு செய்து பயன்படுத்துகின்றனர்.

அய்ஆர்சிடிசி பயனர்களின் வச திக்கு ஏற்ப சேவையை மேம்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது live train status - வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளும்படி வசதி ஏற் படுத்தி உள்ளது. live train status,அதாவது ரயில் எங்கு இருக்கிறது, எங்கு வந்து கொண்டிருக்கிறது என் பதை பயனர்கள் அறிந்து கொள்ள தனியாக ஆப் (செயலி) டவுன்லோடு செய்து பார்க்க வேண்டும். ஆனால் தற்போது தனி ஆப் தேவைப்படாது என்றும் வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளும்படியும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த புது வசதியை மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரைலோஃபி (Railofy)  தயாரித்துள்ளது. இந்த புது வசதி வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp chatbot) மூலம் செயல்படும். , PNR நிலை live train status,அடுத்த ரயில் நிலையம், ரயில் பயண விவரம் ஆகியவற்றை இதில் பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும். ரயில் பயனர்கள் 139 என்ற ரயில்வே உதவி எண்ணைப் பயன்படுத்தியும் live train status  தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப்-பில் தற்போதைய ரயில் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளவும் பிஎன்ஆர் எண்ணின் மூலம் தற்போதைய நிலை அறியலாம்.

அதேபோல் பயனர்கள் வாட்ஸ் அப்பில் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம். அய்ஆர்சிடிசி Zoop  பயன்படுத்தி இணைய வழி மூலம் உணவு ஆர்டர் செய்யலாம். வாட்ஸ் அப் சாட்பாட் +91 7042062070 என்ற எண்ணைப் பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம். அல்லது இணையதளத் தில்[https://wa.me/9170420620 70]  இவ்வாறு குறிப்பிட்டு உணவு ஆர்டர் செய்யலாம்.

No comments:

Post a Comment