மனிதகுலம் தவறான பாதையில் போகிறது: உலக வானியல் அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

மனிதகுலம் தவறான பாதையில் போகிறது: உலக வானியல் அமைப்பு

பருவநிலை மாற்ற விவகாரத்தில் மனிதகுலம் தவறான பாதையில் போய்க்கொண்டிருப்பதாக அய்க்கிய நாட்டு நிறுவனம் கூறியிருக்கிறது. 

நிலக்கரி, எண்ணெய் போன்ற படிம எரிபொருள்களை உலக நாடுகள் இன்னமும் நம்பியிருப்பதே அதற்குக் காரணம் என்று உலக நிறுவனத்தின் அறிக்கை கூறியது. பல்வேறு அமைப்புகள் முன்வைத்த அறிக்கைகளை உலக வானிலை அமைப்பு தொகுத்து வெளியிட்டது. 

இவ்வாண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட கரியமிலவாயுவின் அளவு கோவிடுக்கு முன்பு 2019ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இருந்ததை விட அதிகம் என்று அறிக்கை சொல்கிறது. 

2030ஆம் ஆண்டுக்குள் அந்த அளவை 7 மடங்கு குறைத்தால்தான் உலக வெப்பநிலையைச் சீராக வைத் திருக்க முடியும் என்று உலக நிறு வனம் கூறுகிறது. 

 உலக வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரக் கூடாது என்று 6 ஆண்டுகளுக்குமுன் கையெழுத்தான பாரிஸ் உடன்பாடு விரும்புகிறது. உலக வெப்ப உயர்வு என்பது மறுபடி குறைக்க முடியாதது என்று உலக நிறுவனம் கூறியது.பருவ நிலை மாற்றத்தால் வரும் ஆண்டு வரலாறு காணாத வெப்பமும் வெள்ள மும் உலகை ஆட்டிப் படைக்கிறது.

No comments:

Post a Comment