‘வாட்ஸ் அப்' பயனாளிகளுக்கு - எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

‘வாட்ஸ் அப்' பயனாளிகளுக்கு - எச்சரிக்கை

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் இன்றி யாருமே இருக்க முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு ஸ்மார்ட் போன்களில் பல அப் டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் மக்களிடம் பிரபலமாகவுள்ள செயலிதான் வாட்ஸ் அப். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் தொழில் பயன்பாட்டிற்காகவும், தனிப்பட்ட பயன் பாட்டிற்காகவும், கல்வி பயன்பாட்டிற்காகவும் ‘வாட்ஸ்அப்' செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தன் பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது, ‘வாட்ஸ்அப்'-ல் ஒளிப்படம், காட்சிப் பதி வுகள், காணொலிக் காட்சிகள், செயல்திறன், கோப்பு கள், இருப்பிடம் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இயலும். இவ்வளவு வசதிகள் உடைய ‘வாட்ஸ்அப்' செயலியை பயன்படுத்தும் பயனாளர் களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

உலகில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே மோசடிக் கும்பல் பல்வேறு மோசடி குற்றங்களை செய்து வருகிறது. இப்போது மோசடிக் கும்பல் ‘வாட்ஸ் அப்' பயனர்களை குறிவைத்து புது விதமான மோசடியில் இறங்கி இருப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இம்மோசடி நிகழ்வு பற்றி மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போலியான சிம்கார்டு பெற்று அந்த எண்ணில் இருந்து வாட்ஸ்அப் கணக்கு துவங்கி அதில் பிரபலங்கள் (அல்லது) உயர்ந்த பதவி களில் இருக்கும் அதிகாரிகளின் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து எடுத்து அதை புரொபைல் பிக்சராகவும் வைத்துவிடுக்கின்றனர்.

அந்த WhatsApp எண்ணில் இருந்து மற்றவர் களுக்காக நிதியுதவி கேட்டு (அல்லது) ,இணையதள பணப்பரிமாற்றம் செய்தல் (அல்லது) ஏதாவது பரிசுகளை வழங்கும்படி சில செய்திகளை அனுப்பி மோசடி செய்கின்றனர். இதன் காரணமாக ‘வாட்ஸ் அப்' பயனாளர்கள் இனி தெரியாத ‘வாட்ஸ்அப்' கணக்கில் இருந்து ஏதேனும் இணையதள செய்திகள், செயலிகள், பரிசுகள் பெற (அல்லது) விளையாட என வரக்கூடிய எந்தவொரு லிங்குகளுக்கும், செய்தி களுக்கும் பதிலளிக்க கூடாது. அப்படி அந்த லிங்குகளை திறக்கும்போது உங்களது தகவல்கள் அனைத்தையும் மோசடிக் கும்பல் திருடி விடும் என்று அரசு எச்சரித்துள்ளது. வங்கிக் கடன் அட்டை, குழு வங்கி பண அட்டை வங்கி விபரங்கள், ஓடிபி ஆகிய எந்தவொரு விவரங்களையும் தனிப்பட்ட நபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் பாதுகாப்பிற்காக டூ-ஸ்டெப்-வெரிபிகேஷன் செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் செய்யலாம் எனவும் அரசு கூறியுள்ளது

No comments:

Post a Comment