ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நாடு முழுவதும் மூன்று லட்சம் சிறுபான்மையினருக்கு பயிற்சி அளிக்க பாஜக திட்டம்.

* 2024 தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றியடைய திமுகவினர் இப்போது இருந்தே செயல்பட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

* மோடியின் எதேச்சதிகாரப் போக்கினால் 2024 தேர்தலில் பாஜக தற்போது பெற்றுள்ள 304 இடங்களில் கடும் சரிவு நிச்சயம், ஆர்.ஜே.டி. கூட்டத்தில் கருத்து.

தி இந்து:

* இந்தியாவில் பாசிசத்தின் அறிகுறி அதிகமாகி வருகிறது. அதற்கு கார்ப்பரேட் நிதியுதவி உள்ளது என எச்சரிக்கிறார் எழுத்தாளர் அருந்ததி ராய்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் ‘சகா’ நடப்பது குறித்து அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு.

தி டெலிகிராப்:

* ஆர்.எஸ்.எஸ். பாசிச வரலாற்று திரிபுக்கு மாற்றாக, இந்தியாவின் 12,000 ஆண்டுகள் பற்றிய அறிக்கையை அறிஞர்கள் வரிசைப்படுத்துகின்றனர். மரபியல், தொல்லி யல், மானுடவியல், மொழியியல், வரலாறு மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் சிறு கட்டுரைகளுடன் பங்க ளித்த கிட்டத்தட்ட 100 ஆளுமைகள் ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளனர். 

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment