தமிழ்நாடு மீனவர்கள்மீது இந்தியக் கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்துவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

தமிழ்நாடு மீனவர்கள்மீது இந்தியக் கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்துவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர்  கண்டன அறிக்கை!

தமிழ்நாடு மீனவர்கள்மீது இந்தியக் கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்துவதா என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங் கைக் கடற்படை தாக்கியதைத்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம்; இப் பொழுது இந்தியக் கடற்படையே தமிழ்நாடு மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது எத்தகைய கொடுமை!

மோடி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகே தமிழ்நாடு மீனவர்கள்மீது தாக்குதல் இல்லை - சிறைப் பிடிப்பு இல்லை என்று சொன்னது எல்லாம் பழைய கதை! தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்யும் படலம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

தமிழர்கள் என்றாலே பி.ஜே.பி. அரசுக்கு ஓர் ஒவ்வாமை. அது எல்லா வகையிலும் பிரதிபலிக்கிறது. இதற் கொரு முடிவு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் பிரத மருக்கு இதுகுறித்து கடிதம் எழுதிய தோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிதியும் அளித்துள்ளார்.

இந்தியக் கடற்படை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - குற்றம் இழைத்தவர்களுக்கு உரிய தண்டனையும் பெற்றுத்தர வேண் டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.10.2022



No comments:

Post a Comment