ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

ஒற்றைப் பத்தி

 முதலைக் கதை!

சில நாள்களாக ஒரு கட்டுக்கதை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அந்தக் கட்டுக்கதை மெத்த படித்த கேரள மக்கள் பகுதியிலிருந்து உலா வருவதுதான் வேடிக்கை!

கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் அனந்தபுரா என்னும் கிராமத்தில் ஒரு கோவில், அதன் பெயர் பத்மநாபசுவாமி கோவில். அந்தக் கோவிலையொட்டி ஒரு குளம்.

அந்தக் குளத்தில் ஒரே ஒரு முதலையாம் - அந்த முதலைக்கு வயது 70.

அந்த முதலைக்குப் பெயர் ‘பாபியா' - அந்த முதலை யாரையும் தொந்தரவு செய்யாதாம். அந்த முதலையைப் பற்றிய ‘அற்புதம்' திடீர் என்று ஊடகங்களில் இடம்பெற்றுவருகிறது.

70 ஆண்டுகளாக வராத கதை - இப்பொழுது வருகிறது; அது என்ன வாம்?அது  சைவ முத லையாம் - அந்தக் கோவில் குளத்தில் மேயும் மீன்களைக்கூடக் கடைக்கண்ணால் பார்க்கா தாம். அப்படியொரு சைவப் பழம்!

கோவிலின் குருக்கள் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் உணவி டுவாராம். கோவில் குருக்கள் கொடுக்கும் உணவு எப்படிப்பட்டதாக இருக்கும்? சொல்லித் தெரிய வேண்டுமா?

கோவில் பிரசாதச் சோற்றை உருண்டையாக உருட்டி, குருக்கள் முதலையின் வாயில் வைப்பாராம். அதனைச் சுவையாக உண்டு 70 ஆண்டுகளாக உயிர் வாழும் அந்தச் சைவ முதலை கடந்த 9 ஆம் தேதி மண்டையைப் போட்டுவிட்டது.

இதுதான் சந்தர்ப்பம் என்று கதையளக்க ஆரம்பித்துவிட்டனர். கோவிலைப் பாதுகாக்க கடவுளால் அனுப்பப்பட்ட தெய்வீக முதலையாம் அது.

தெய்வீக முதலை சாகுமா? என்ற கேள்வி கேட்கவேண்டாம். கோவிலைப் பாதுகாக்கக் கடவுளால் அனுப்பப்பட்ட முதலை செத்துப் போய்விட்டதே! அந்தக் கோவிலை இனி பாது காக்கப் போவது யார்?

அறிவியல் ரீதியாக உண்மை என்ன தெரியுமா? முதலை ஒரு ஊன் உண்ணி! வன நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? ‘பாபியா' மக்கள் வகை முதலை. கோவில் குருக்கள் கொடுத்தது எல்லாம் துணை உணவுதான். உண்மையில் அதன் உணவு மீன்கள், சில நேரங்களில் சிறிய, பெரிய பாலூட்டிகளை வேட்டையாடும் என்று குட்டை உடைத்து விட்டனர்.

அந்த முதலைக்கு முழுக் கோழியைக் கொடுப்பது எல்லாம் வீடியோவிலும் காட்டப் படுகிறது. 

இணைய தளத்தில் வலம் வரும் முதலையோடு மொட்டைத் தலை நபர் இருக்கும் படம் ஆஸ் திரேலியாவைச் சேர்ந்த விலங்கின ஆய்வாளர் படத்தை பாபியா முதலை என்று உல்டா பண்ணியுள்ளனர். இந்த வெட்கக்கேட்டை என்ன சொல்ல! 

-  மயிலாடன்


No comments:

Post a Comment