செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

செய்திச் சுருக்கம்

▶️மீட்பு

நாகை பகுதியில் உள்ள பன்னகா பரமேஸ்வரி கோயிலில் ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத மூன்று ‘கடவுளர்‘ சிலைகளை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

▶️தோட்டம்

மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் ரூ.8 லட்சம் செலவில் ஒளிரும் தோட்டம் அமைக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை திட்டம்.

▶️எச்சரிக்கை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிமனைகளில் உள்ள ஓய்வறையில் எக்காரணம் கொண்டும் புகைப்பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

▶️மாற்றம்

தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் 1,201 காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவு.

▶️தடை

சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை எச்சரிக்கை.

▶️வருமானம்

இந்தியாவில் யு டியூப் மூலம் ரூ.6,800 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்றும் 7 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் இதன் தலைமை அதிகாரி நீல் மோகன் தகவல்.

▶️கருவிகள்

சென்னை மாநகராட்சியில் உள்ள கட்டடங்களை துல்லியமாக அளவீடு செய்ய நவீன லேசர் தொழில்நுட்பம் கொண்ட கையடக்க டிஜிட்டல் கருவிகளை வருவாய் அலுவலர்களுக்கு சென்னை மாநகர மேயர் பிரியா  ராஜன் வழங்கினார்.

▶️மீண்டும்

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் முட்டை விற்பனைக்கு தடை, 20,000 வாத்து களை கொல்ல முடிவு.


No comments:

Post a Comment