விளையாட வரும் மூக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

விளையாட வரும் மூக்கு

தலையில் அணியும் கருவி, கைகளில் விளையாட்டு நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் 'கன்ட்ரோலர்' கருவி. இப்படி மெய்நிகர் விளையாட்டுக்களில் கண், காது, விரல்கள், ஏன் ஒட்டு மொத்த விரல்களும் பங்கேற்க முடியும். ஆனால், மூக்கை மட்டும் ஆட்டத் தில் யாரும் சேர்க்கவில்லை.

இப்போது சுவீடனின் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதையும் ஆட்டத்திற்குள் சேர்க்க, 'நோஸ்வைஸ்' என்ற கையடக்க வாசனைமானியை உரு வாக்கி உள்ளனர்.

கன்ட்ரோலர் கருவி போலவே இருக்கும் நோஸ்வைஸ் கருவியை, விளையாடுபவர் கையால் இயக்கலாம். அக் கருவிக்குள் சில வாசனை திரவியங்கள் இருக்கும்.

அவற்றை மென்பொருள் மூலம் குறிப் பிட்ட விகிதங்களில் வெளியே தெளிக்கச் செய்வதன் மூலம், விளையாடுபவர்  கருவி வழியே காணும் காட்சிக்கு ஏற்ற வாசனைகளை உணர்வர்.

No comments:

Post a Comment