கோவை அரசுப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பா? விசாரணைக்கு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

கோவை அரசுப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பா? விசாரணைக்கு உத்தரவு

கோவை, அக்.10- கோவை மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி  வகுப்பிற்கு எதிர்ப்பு வெடித்தது. கோவை மாவட்டம், ஆர்எஸ்புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி நடப்பதாக ஒளிப்படம், காட்சிப்பதிவுகள் நேற்று (9.10.2022) சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த மாநகராட்சி ஆணையாளர், கோவை மாநகராட்சி  பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி  வளாகத்தில் மதம் சார்பாக பயிற்சி நடை பெறுவது குறித்து உரிய விசாரணை நடத்த,  அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment