மனம் விட்டுப் பேசலாமே... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

மனம் விட்டுப் பேசலாமே...

வார இறுதி நாட்களில் மற்ற செயல் பாடுகளில் ஈடுபடாமல், குடும்பத்தோடு நேரம் செலவழிப்பது, வீட்டு வேலை களைப் பகிர்ந்து கொள்வது, ஒன்றாகச் சாப்பிடுவது போன்ற செயல்கள், குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்று மையை வலுப்படுத்தும். பொருளீட்டுவ தற்காக தாயும்-தந்தையும், கல்வி மற் றும் கலைகளை கற்றுக்கொள்வதற்காக பிள்ளைகளும் ஓடிக்கொண்டு இருக் கின்றனர். 

வீட்டில் இருக்கும் பெரியவர்கள், தொலைக்காட்சி தொடர்களின் பிடியில் சிக்கிக் கொள்கின்றனர். இவற்றை எல்லாம் கடந்து மீதி இருக்கும் நேரத்தை, சமூக வலைத்தளங்களும், அலைபேசி விளையாட்டுகளும் ஆக் கிரமித்துக் கொள்கின்றன. குடும்பமாக அனைவரும் சேர்ந்து வாழ்ந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு வட்டத்துக்குள் தனித்தே இருக்கின்றனர். 

இதுதான் பல குடும்பங்களின் இன்றைய நிலை. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதற்கும், தங்கள் இன்ப-துன்பங்கள் மற்றும் அனுபவங் களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேர மில்லாமல் போகிறது. இதனால் பலரின் வாழ்க்கை திசைமாறிப் போகும் ஆபத்து அதிகரித்து வருகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத் துக்காக நேரம் செலவழிக்க வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். குழந்தைகள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண் டும். அவர்கள் சொல்வதை பொறுமை யாக கேட்க வேண்டும். இதன் மூலம், குழந்தைகள் மனதில் உள்ளவற்றை புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக் கும். அவர்களுக்குள் இருக்கும் எதிர் மறை எண்ணங்களை நீக்கி, நல்வழிப் படுத்த முடியும். 

 கணவன்- மனைவி ஒற்றுமையை அதிகரிக்க முடியும். குடும்பம் என்ற கட்டமைப்பு உறுதி பெற்றால், சமுதாயத் தில் நன்மைகள் அதிகரிக்கும். குற்றங் கள் குறையும். குடும்பத்தின் அன்பும், அரவணைப்பும் தனி மனிதனை பொறுப்புமிக்கவனாகவும், வெற்றியாள னாகவும் மாற்றும். குடும் பம் என்பது முக்கியமானது மட்டு மில்லை, அதுவே எல்லாமுமான சமூகம் ஆகும்.

No comments:

Post a Comment