நூல்: அகண்ட தமிழகமே திராவிடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

நூல்: அகண்ட தமிழகமே திராவிடம்!

நூல் ஆசிரியர்: பேராசிரியர் - முனைவர் வெ.சிவப்பிரகாசம்

வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம்

விலை: ரூ.120/-

பக்கங்கள்: 126

உலகப் பெருமொழிகளிலே மிக மூத்த மொழியாகவும், உலகில் முதலில் தோன்றிய மொழியாகவும் இருந்திடக் கூடிய தமிழ்மொழி, "மண் தோன்றாக் காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்த குடி" எனத் தமிழ் குடியைத் தரமுயர்த்திப் பேசும் முதுசொல் முளைத்தது. தமிழ்ப் பெருங்குடி மக்கள் தம்மைத் தமிழர்கள் என மட்டுமே அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டுமா, இல்லை திராவிடர் எனும் பொதுப் பெயரையும் தழுவிக் கொள்ளலாமா? தமிழர்கள் வாழும் பகுதி 'தமிழ்நாடு' என மட்டும் குறிக்கப்பட வேண்டுமா? தமிழகத்தோடு சார்புடைய புற பகுதிகளையும் இணைத்து 'திராவிட நாடு' எனவும் விளிக்கப் படலாகுமா என்பதுதான்.

திராவிடம் வேறு, தமிழ் வேறு என்பது போல் சிலர் இன்று பேசி வருகின்றனர். இந்த நிலையில் "அகண்ட தமிழகமே திராவிடம்'' என்கிறார் நூலாசிரியர். திராவிடத்தையும், அதன் ஆய்வாளர் களைப் பற்றியும் தமிழ்த்தேசியவாதி களில்சிலர் முறைகேடாகவும் உண்மைக் குப் புறம்பாகவும் பேசியும் எழுதியும் வருவதை மறுப்பதற்காகவே இந்நூலாசி ரியர் இயற்றியுள்ளார்.

இந்தியா முழுவதும் பரவியுள்ள பூர்வீகப் பழங்குடிகளின் தாய்மெழிகளின் வேர் மொழியாக நமது தமிழே இருக்கிறது என்றும், தென்னாட்டுத் திராவிட 

மொழி களான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற திராவிட மொழிக் குடும்பங்களின் அடித்தளமாக இருப்பதும் தமிழே என்றும், இவற்றை ஒன்றிணைத்து உருவாகும் கருத்தியல் நிலப்பரப்பான அகண்ட தமிழகமே திராவிடம் என்று இந்நூலாசிரியர் உறுதிப் படுத்தியுள்ளார். "தமிழ் எங்கள் உரிமைச் செம்மொழிகளுக்கு வேர்'' என்பதைத் திராவிடம் போற்றும். தமிழர் நாகரிகம் திராவிட நாகரிகம் ஒன்றோடு ஒன்றாக இயைந்தது, வளர்ந்தது என்பதை முன்மொழிகிறார்.

No comments:

Post a Comment