இந்தியும், மாநில மொழிகளும் பயிற்று மொழிகள் - நாடாளுமன்ற நிலைக்குழு சிபாரிசாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

இந்தியும், மாநில மொழிகளும் பயிற்று மொழிகள் - நாடாளுமன்ற நிலைக்குழு சிபாரிசாம்

 புதுடில்லி, அக்.10 கேந்திரிய வித்யாலயா முதல் அய்அய்டி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது புதிய சர்ச்சையாகி உள்ளது. மேலும் அய்க்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் அமித்ஷா குழு பரிந்துரைத்துள்ளது.

நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவானது 1976-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மக்களவை  20 பேர்; மாநிலங்களவை உறுப்பினர்கள்  10 பேர் உள்பட 30 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து இந்த அலுவல் மொழி குழு அறிக்கை வழங்கும். தற்போது இந்த குழுவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைவராக உள்ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக் குழு தமது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கியது. அமித்ஷா குழுவானது இந்தி மொழி தொடர்பாக அளித்துள்ள பரிந்துரைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்பரிந்துரைகளில், அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாக வும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும்; ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஒரு வாய்ப்பாகத்தான் இருக்க வேண் டும் என கூறப்பட்டுள்ளது அய்.அய்.டி கல்வி நிறுவனங்கள், அய்அய்எம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித் யாலயாக்கள், நவோதயா விதியால யாக்கள், ஒன்றிய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயிற்று மொழியாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிறது அமித்ஷா குழுவின் பரிந்துரை.

அதேபோல், வேலைவாய்ப்பு தேர்வு களிலும் இந்தி மொழி அவசியமாக்கப் பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என் கிறது இக்குழு பரிந்துரை. அய்க்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டுமாம்.இந்தி பேசும் மாநிலங் களில் உயர்நீதிமன்றத்தில் இந்தி இடம்பெற வேண்டும்; அரசியல் சாசன தேவை ஏற்பட்டால் மட்டுமே ஆங்கில மொழி பெயர்ப்பை பயன்படுத்த வேண்டும்; விளம்பரங்கள் அனைத்தும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும்; ஆங்கில விளம்பரங்கள் சிறியதாகத் தான் இருக்க வேண்டும் எனவும் அமித்ஷா குழு பரிந்துரைத்துள்ளது. ஒன்றிய அரசின் அலுவலகங்கள் அனைத்திலும், அமைச்சரவை இலாகாக்கள் அனைத்திலும் கடிதங்கள், பேக்ஸ்கள், இ மெயில்கள் இந்தியில்தான் இருக்க வேண்டும்; அலுவலக பயன்பாட்டுக்கு எளிதான இந்தி பயன்படுத்த வேண்டும். ஒன்றிய அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தியில் இருக்க வேண்டும் எனவும் பரிந் துரைத்துள்ளது அமித்ஷா குழு.

ஆங்கிலம் என்பது அன்னிய மொழியாகும். ஆங்கில வழிக் கல்வி என்ற காலனியாதிக்க நடைமுறையை கைவிட வேண்டும் என்று பெரும் பாலான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஹிந்தி மற்றும் பிராந்திய மொழிகள் ஊக்கு விக்கப்பட வேண்டும். அதன்படி அனைத்து உயர்நிலைக் கல்வி நிறுவனங் களிலும் ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி வழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment