உள்நாட்டில்
முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதி நவீன இலகு ரகு ஹெலிகாப்டர்களை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்திற்கு அளித்தார்.
‘நீட்' குளறுபடி
‘நீட்' தேர்வு மதிப்பெண் குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அசல் விளைத்தாளை காண்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
சாதனை
கடந்த ஆண்டைவிட பதிவுத்துறையில் ரூ.2,438 கோடி வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளது என இத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.
நீட்டிப்பு
மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 6ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மானியம்
கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தகைசால்
தமிழ்நாடு முழுவதும் 28 அரசுப் பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன்மூலம் 62,460 மாணவர்கள் பயனடைவர் என கல்வி அதிகாரிகள் தகவல்.
போராட்டம்
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க அவ்வரசு நடவடிக்கை எடுத்து வருவதை திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சருக்கு 24ஆம் தேதி வரை மின் ஊழியர்கள் கெடு விதித்துள்ளனர்.
திட்டங்கள்
ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு முறையாக செயல்படுத்தி வருவதாக ஒன்றிய இணை அமைச்சர் பகவந்த்குபா தெரிவித்துள்ளார்.
நவீனமயம்
இந்தியா முழுவதும் 200 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்.
No comments:
Post a Comment