தென்றல் தரும் மின்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

தென்றல் தரும் மின்சாரம்

சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிறிய அளவில் உள்ள கருவி மூலம், குறைந்த வேகத்தில் வீசும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.

இக்கருவி 15 செ.மீ.,க்கு 20 செ.மீ., அளவு உள்ளது. இதை கட்டடத்திற்கு வெளியே காற்றோட்டமான இடத்தில் வைத்துவிட்டால் போதும்.

காற்று லேசாக வீசினாலும் இந்தக் கருவி அசைந்து அதிரும். மூன்று வேறு விதமான பொருட்களால் ஆன கருவி அசைவதால், 'டிரைபோ எலெக்ட்ரிக்' விளைவு மூலம் மின்சாரம் உற்பத்தியாகும்.

ஒரு சோதனையில், நொடிக்கு நான்கு மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில், நான்யாங் விஞ்ஞானிகளின் கருவி தயாரித்த மின்சாரத்தின் மூலம் 40 சிறிய எல்.இ.டி., விளக்குகள் எரிந்தன.

கட்டடங்களுக்கு வெளியே பொருத்தினால், 24 மணி நேரமும் கணிசமான மின்சாரத்தை இக் கருவிகள் உற்பத்தி செய்து தரும்.

No comments:

Post a Comment