டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

டிஜிட்டல் கரன்சி அறிமுகமாகிறது

புதுடில்லி, அக். 9- டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இ-நாணயம் அறிமுகம் பக்க பலமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி 7.10.2022 அன்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதா ரத்தை மேம்படுத்துவதில் இ-நாணயத்தின் பங்கு முக்கியமானதாக இருக் கும். மேலும், நிதி ஒருங் கிணப்பு சேவை மற்றும் பணப்பட்டுவாடா முறைகளை திறமையாக கையாளவும் இந்த அறி முகம் மிக பயனுள்ளதாக அமையும்.

இ-நாணயம் எனப் படும் டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்துருக் கள் வரவேற்கப்பட்டன. குறிப்பாக, தொழில்நுட் பம், வடிவமைப்பு தேர்வு கள், டிஜிட்டல் ரூபாய்க் கான சாத்தியமான பயன் பாடுகள் மற்றும் வழங்கல் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறுமுக்கிய அடிப் படை அம்சங்கள்குறித்து விரிவாக ஆலோசிக்கப் பட்டது. அதன்படி, டிஜிட் டல் நாணயம் என்பது நாணயக் கொள்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாண யம். இது மத்திய வங்கி யின் இருப்புநிலைக் குறிப் பில் ஒரு பொறுப்பாக இருக்கும்.

டிஜிட்டல் நாணயமா னது அனைத்து குடிமக் கள், நிறுவனங்கள் மற் றும் அரசு நிறுவனங்க ளால் பணம் செலுத்தும் ஊடகமாகவும், சட்டப் பூர்வ டெண்டராகவும், மதிப்புள்ள பாதுகாப் பான சேமிப்பகமாகவும் கருதப்பட வேண்டும்.

வங்கிக் கணக்கு வைத் திருக்க வேண்டிய அவ சியமில்லை. பரிவர்த்த னைகளுக்கான செலவை டிஜிட்டல் கரன்சி குறைக் கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

காகித நாணயத்தின் பயன்பாடு குறைந்து வரு வதால், உலக அளவில் மத்திய வங்கிகள் இப் போது மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மின் னணு வடிவ நாணயத்தை பிரபலப்படுத்த முயற்சி கள் மேற்கொண்டு வரு கின்றன. அந்த வகையில், குறிப்பிட்ட சில பயன் பாடு களுக்காக டிஜிட் டல் கரன்சியை விரைவில் அறிமுகப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. -இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment