தமிழர் தலைவர் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா சேர்த்து அளிக்க முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

தமிழர் தலைவர் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா சேர்த்து அளிக்க முடிவு!

தருமபுரி, அக். 19-  தருமபுரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17 -10- 2022 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடை பெற்றது. மாவட்ட கழகத் தலைவர் வீ.சிவாஜி தலைமை ஏற்றார், மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன் வரவேற்புரையாற்றினார்.

கழக பொதுக்குழு உறுப்பினர்கள் க.கதிர்,புலவர் இரா.வேட்ராயன்,  மண் டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன் னிலை ஏற்றனர். 

கழக மாநில அமைப்பாளர் ஒரத்த நாடு இரா.குணசேகரன் கூட்டத்தினு டைய நோக்கத்தைப் பற்றியும் அதை செயல்படுத்தும் முறை குறித்தும் தொடக்க உரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பெரியார் வீர விளை யாட்டுக் கழக மாநில செயலாளர் இராமச்சந்திரன், மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மண்டல மாணவர் கழகச் செயலாளர் இ.சமரசம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.     

இறுதியாக கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் மத வாத அமைப்புகள் குறித்தும் அது ஏற் படுத்தும் அபாயத்தை தடுக்க இருக்கக் கூடிய ஒரே நாளிதழ் விடுதலை என்ப தும் அதை அனைவரும் வாங்கிப் படித் தால் மட்டுமே அந்த  அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி விளக்கி சிறப்புரை யாற்றினார். விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ் ஒரு ஆண்டு விடு தலை சந்தாவினை மாநில அமைப்பா ளர் ஒரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார்.

கலந்து கொண்டோர்

நகர திராவிடர் கழக தலைவர் கரு.பாலன்,கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட  துணைத்தலைவர் கோ. தன சேகரன், ஆசிரியர் அணி பொறுப்பாளர் மூ.சிவகுமார், தருமபுரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா, பெரியார் மன்ற உதவியாளர் மஞ்சு, பெரியார் புத்தக நிலைய உதவியாளர் அருணா, மற்றும் அருள்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

தீர்மானம் 1.

8-10- 2022 சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தலைவர் தலைமையில் நடை பெற்ற தலைமை செயற்குழு கூட்ட தீர்மானங்களை தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.                   

தீர்மானம் 2.

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். என்னும் ட்ரோஜன் குதிரை புத்தக அறிமுக விழாவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3.

உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலை இதழை தருமபுரி, பென்னா கரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப் பட்டி, அரூர் சட்டமன்ற தொகுதிகளில் சேர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக சேர்த்து அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.


No comments:

Post a Comment