ராகுல் காந்தி அவர்களுடன் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

ராகுல் காந்தி அவர்களுடன் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி சந்திப்பு

சுதீந்திரம், செப். 15- காங்கிரசு இயக்கத் தின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமைப் பேரணியினை தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.9.2022 அன்று கன்னி யாகுமரியில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பயணத்தின் இரண்டாம் நாளான 8.9.2022 அன்று பல்வேறு அமைப் புகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் தாழ்த்தப்பட் டோர் ஜாதிகள் மற் றும் பழங்குடியினர் தொடர்பான செயல்பாட் டாளர்களும் மதியம் 3 மணி அளவில் சுசீந்திரம் எம்.எஸ்.எம் பள்ளியில் ராகுல்காந்தியைச் சந்தித்து உரையாடி னர்.

தமிழ்நாடு மாநில காங்கிரசின் எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் ஏற்பாட் டில் நடந்த இந்த சந்திப்பில் திரா விடர்கழகத்தின் பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அருள் மொழி பங்கேற்றார்.

ராகுல்காந்தி அவர்களுடன் நடந்த உரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்கெனவே ராகுல்காந்தி அவர் களை சந்தித்ததையும் காங்கிரசு கட்சிக்கு ராகுல் காந்தி அவர்கள் தலைமையேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதையும் அருள்மொழி குறிப்பிட்டார்.  மேலும் ராகுல் காந்தி அவர்களின் நீண்ட பயணத்தின் அடுத்த முழக் கமான “அரசியல் சாசனத்தைக் காப்போம்” என்பதன் தேவையை யும் இந்திய அரசியல் சாசனத்தை மாற்றி ஆர்.எஸ்.எஸ்.சின் மனுதர்ம அடிப்படையலான அரசியல் சாசனத்தை கொண்டுவர பிஜேபி செய்துவரும் முயற்சிகளை திரா விடர் கழகம் தொடர்ந்து அம்பலப் படுத்தி வருவதையும் தெரிவித்தார்.

அப்போது ராகுல்காந்தி அவர்கள் அருள்மொழியிடம் ஆர்.எஸ்.எஸ். இன் திட்டத்தால் பெரும் பாதிப்பை அடையப் போகிற மக்கள் அதனை உணரா மல் இருப்பதற்கு எது காரணமாக இருக்கிறது என்று நீங்கள்  நினைக் கிறீர்கள் என்று  கேட்டார்.

அதற்கு அருள்மொழி கூறிய பதிலில் “ ஜெர்மனியில் ஹிட்லரால் நடத்தப்பட்டது போன்ற பொய்ப் பிரச்சாரமும் அதற்குத்துணையாக பரப்பப்படும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமும் தான் இந்துப் பெரும்பான்மை என்ற மனநிலையை உருவாக்கு கிறது" என்று கூறியதை ராகுல்காந்தி அவர்கள் ஆமோதித்தார். மேலும் அரசுத்துறைகள், காவல் மற்றும் நீதித்துறைகளிலும் திட்டமிட்டு ஆர்எஸ்எஸ் ஊடுருவல் நடப்பதை தடுத்து நிறுத்தவும், பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கான சரியான விகிதாச்சார உரிமைகள் கிடைக்க உடனடியாக ஜாதி வாரியான சமூக கல்வி நிலைபற்றிய கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்க வேண்டும் என்றும் அருள்மொழி கேட்டுக்கொண் டார். ராகுல்காந்தி அவர்களுக்கு , தந்தை பெரியார் பற்றி திரு பாபு ஜெயகுமார் அவர்கள் எழுதிய“The Man ahead of his time “ என்ற நூலைப் பரிசளித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ் நாடு அரசின் சமூக நீதிப் பாது காப்புக் குழுவின் உறுப்பினரும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் மேனாள் இணைத் துணைவேந்தருமான தேவதாஸ் சாமிநாதன் அவர்கள் ஜாதிப் பிளவுகளை அதிகப்படுத்தி வரும் ஆர்எஸ்எஸ், அதிகாரமற்ற மக்க ளிடம் ஊடுருவிவரும் ஆபத்தை சுட்டிக்காட்டி காங்கிரசு அந்த மக்களிடம் பணியாற்ற வேண்டும என்று எடுத்துக்கூறினார். மேலும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர் கள் பற்றி திராவிடர்கழகத் தலை வர் ஆசிரியர் அவர்கள் எழுதிய நூலை ராகுல் காந்தி அவர்களுக்குப் பரிசளித்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற காங் கிரசு கட்சித்தலைவருமான செல் வப்பெருந்தகை, திருவள்ளூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப் பினர் ஜெய்குமார், இந்திய ஒன் றிய அரசின் மேனாள் அமைச்சர் களான திக்விஜய்சிங் மற்றும் ஜெய் ராம்ரமேஷ், காங்கிரசு கட்சியின் எஸ்.சி., எஸ்.டி.,  பிரிவின் தலைவர் ராஜேஷ் லிலோத்யா, காங்கிரசு செய்தித் தொடர்பாளர் குர்தீப் சாப்பல் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment