கனடாவில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு மனிதநேய சமூகநீதி மாநாடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

கனடாவில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு மனிதநேய சமூகநீதி மாநாடு!

பெரியார் உலகமயமாகி வருகிறார் - மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது!

மாநாட்டின் வெற்றிக்குழைத்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டு - நன்றி!

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

கனடாவில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு மனிதநேய சமூகநீதி மாநாடு! பெரியார் உலகமயமாகி வருகிறார் -  மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது! மாநாட் டின் வெற்றிக்குழைத்த அனைவருக்கும் பாராட்டு - நன்றி என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 24, 25 ஆகிய இரு நாட்களில், கனடாவின் மிகப் பிரபலமான பெருநகரமான டொராண்டோவில், அமெரிக் காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பெரியார் பன்னாட்டு அமைப்பினர் ஏற்பாட்டில், கனடா வாழ் மனிதநேய அமைப்புகள் (Humanist Canada, Humanist Torando, Center for Iniquiry), பகுத்தறிவு அமைப்புகள், டொராண்டோ வாழ் தமிழ் அன்பர்கள் இவர்களை இணைத்து ஒரு பன்னாட்டு மாநாட்டினை மிகச் சீரும் சிறப்புடன் நடைபெற்றது என்பது, "பெரியார் உலக மயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது" என்பதற்கான அருமையான நடப்புச் சான்றாகும்!

பெரியார் யுகம்

பெரியார் யுகம் என்பது தமிழ்நாட்டில் தொடங்கி, இந்தியா முழுவதிலும் இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த 28 ஆண்டு களுக்கு முன்பு, அமெரிக்காவின் சிகாகோ நகரில், டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் சரோஜா இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ் போன்ற பல பெரியாரிஸ்டுகள் முயற்சியால் 1992இல் தொடங்கப்பட்டு, அதன் பணி வளர்ந்து மூன்று பன்னாட்டு மாநாடுகளை ஜெர்மனி - கொலோன் நகரம் (அய்ரோப்பா), வாஷிங்டன் (அமெரிக்கா), டொராண்டோ (கனடா) என மிகச் சிறப்பாக நடத்தி பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை, மனிதநேயம் முதலிய அருமையான மானுடத் தத்துவத்தை பரப்பிடும் பணியில் முத்திரை பதித்து வருகின்றனர்.

ஜெர்மனி மாநாட்டிலும், வாஷிங்டன் மாநாட்டிலும் புதிய வெளியீடுகள் ஆங்கிலத்தில் இதன் லட்சிய விளக்கக் கையேடுகளாகவும், கருத்தியல் விளக்கமாகவும் வெளி யிட்டு வாகை சூடி வருகின்றனர்!

இதில் நாம் மிகவும் மகிழ்ந்து பெருமை கொள்ளும் செய்தி என்னவென்றால், இளைய தலைமுறையின் பங்கும் ஒவ்வொரு மாநாட்டிலும் பெருகி வளருகிறது; இது நமது நம்பிக்கைக்கு வலு சேர்த்து நம்மையும் இளமையாக்கும் ஒரு மாமருந்தாகவும், டானிக்காகவும் ஆகி வருகின்றன!

பெரியார் கொள்கை என்பது மானுடம் உய்ய வந்த மகத் தானது. மானமும், அறிவும் மாண்பென மனிதகுலத்திற்கு போதிக்கும் கொள்கை. மண்ணுரிமை எல்லையைத் தாண்டிய மானிட எல்லையைத் தொடும் கொள்கையாகும்!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மநா£டு பெரியார் பன்னாட்டு அமைப்பினரால் அநேகமாக, ஆஸ்திரேலியா அல்லது ஆப்பிரிக்கா கண்டத்தின் ஒரு பகுதியில் நடைபெற வாய்ப்புகள் உண்டு.

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் (தொழும் என்பது பின்பற்றத்தக்கது என்று பொருள்படத் தக்கதே!)

ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் வாய்ந்தன. டாக்டர் சோம.இளங்கோவன் தலைமையில் ஒரு குழு பல மாதங்கள் திட்டமிட்டு செயலால் வெற்றிக்கனி பறித்தனர்!

நண்பர் கே.ஆர்.எஸ். என்ற இரவிசங்கர் கண்ணபிரான், பேராசிரியர்கள் இலக்குவன்தமிழ், அரசு.செல்லையா, டாக்டர் சரோஜா, அருள்செல்வி பாலகுரு போன்றவர்களது திட்டமிட்ட உழைப்பு மாநாட்டினை ஆக்கப்பூர்வ கருத் தியல் களமாக ஆக்கிய சிறப்பினைப் பெற்றது!

எல்லாவற்றிற்கும் மேலாக தனிச் சிறப்பு - இம்மாநாட் டிற்கு "திராவிட மாடல்" ஆட்சியின் ஒப்பற்ற முதல் அமைச் சராக நாளும் சாதனைச் சரித்திரப் பொன்னேட்டைப் படைத்து  - தமிழ்நாடு தாண்டிய உலகளாவிய பெருமையை "திராவிட மாட"லுக்கும், திராவிடத் தத்துவங்களுக்கும் அளித்து மெருகேற்றினார் நமது முதல் அமைச்சர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்!

அவர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என்பதை உலக அரங்கும் உணர்ந்து - இன்று ஒளி வீச்சுடன் மகிழ்ந்து பாராட்டும் வண்ணம் அமைந்தது அவரது பேருரை!

அறிஞர்களின் ஆய்வுரை அனைத்தும் மானுட உரிமை வரலாற்றின் பல பகுதியின் பாட வகுப்புகள் போல அமைந்திருந்தன.

நேரில் கலந்து அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு நமக்கு இம்முறை ஏற்படவில்லை - தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்றாலும் உள்ளத்தால் நான் உறைந்து கிடந்தேன் - அங்கே! பள்ளத்தில் வீழ்ந்த மனிதகுலம் விழி பெற்று மானுடத்தின் மாண்பினை மன்பதைக்குக் கூறிய உரைகளைக் கேட்டேன் - பெரியாரின் "இனி வரும் உலகம்" கருத்தியலின் நடைமுறையை நாங்கள் இங்கிருந்தே (தமிழ்நாட்டிலிருந்தே) அனுபவிக்கும் அரிய வாய்ப்பு என்றே  கருதிக் கொண்டு மகிழ்வுற்றோம்.

பாராட்டுக்குரிய தோழர்கள்

அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலர்கள் போல் தோழர்கள் மணவாளன் - ரேணு குடும்பத்தினர், தமிழ் உணர்வாளர்கள் நண்பர் பால் பாண்டியன், சீனுவாசன், டாக்டர் தமிழவேள் குடும்பத்தினர் என்று பலரது ஊக்கமும் மாநாட்டின் வெற்றிக்குப் பெரிதும் காரணமாயிற்று.

தனது மருத்துவப் பணியில் விருப்ப ஓய்வு பெற்று, பெரியார் கொள்கைப் பிரச்சாரத்தைத் தனது வாழ்நாள் பணியாக, சகோதரர் டாக்டர் சோம.இளங்கோவன், அவரது வாழ்விணையர் டாக்டர் சரோஜா, அவரது குழு நண்பர்களும் அலுப்பு சலிப்பின்றி இந்த நன்றி பாராத் தொண்டினை மகிழ்ச்சியுடன் செய்து, இந்த விளைச்சல் உலக அளவில் பெரியார் கொள்கை வெற்றி பெற்று - பெருமை சேர்ப்பதற்கு பணியாற்றியமைக்கு எப்படி நன்றி கூறுவது என்பதே தெரியவில்லை!

இப்பணி செய்ய என் வாழ்வு நீடித்து இருப்பதற்கும் டாக்டர் சோம.இளங்கோவன் ஒரு முக்கிய காரணி அல்லவா! 31 ஆண்டுகளுக்கு முன் செய்த அவரது மருத்துவ உதவியே என்னைப் பணி செய்ய வாய்ப்பளித்த ஒன்று! தனிப்பட்ட முறையில் அவருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது நிறைந்த நன்றி உண்டு. பெரியார் எங்களை இணைப்பவர் - அதேபோல நண்பர் இலக்குவன் தமிழ், அரசு.செல்லையா போன்ற பாராட்டப்பட வேண்டிய அத்துணைக் கொள்கைக் குடும்பங்களுக்கும் நமது நன்றி! இரண்டு நாள்கள் நல்ல தொண்டறம் செய்து, பெரியவர்களை ஈர்த்து - பணி முடித்த இளைஞர்களை "பலே, பலே இளைஞர்காள்" என்று மகிழ்ச்சியுடன் தட்டிக் கொடுக்கிறோம்.

மாநாட்டுக்குழு :

சோம.இளங்கோவன், சரோ இளங்கோவன், ரவிசங்கர் கண்ணபிரான், டேன்டன் துரைராசா, தமிழ் இலக்குவன், அரசு செல்லையா, வா.நேரு, தமிழ்மணி வீரசேகர், அறிவுப்பொன்னி எழில்வடிவன், அருள்செல்வி வீரமணி, இளமாறன் பெருமாள், மோகன் வைரக்கண்ணு, ரவி வைத்தியலிங்கம், சரவணகுமார் மணியன், துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், விஜய் சாந்தலிங்கம்

பொருள் உதவி:

Manavalan Renuka, Srinivasan, Paul Pandian, Dr. Lakshman Tamil, Thamizhmani V, Dr. Thamilavel Somasundaram, Dr.Saroja Ilangovan, Dr. Bala Swaminathan, Andi Giri, Dr. A.M Rajendran, Dr. Arasu Chelliah, Dr. Janakiraman, Dr. Sithanandam, Balu Balagru, Dr. V.G. Dev, Dr.KRS, Ganesh Radhakrishnan, Mohan Vairakannu, Ram Ranjan, Thara Chandran, Caldwell Velnambi, Balagan Arumugasamy, Arasar Arullalar, Dr.Manoharan Nallathambi, Duraikannan, Elamaran Perumal, Manoharan & Bhuvi, Prabhu  - Valai Tamil, Saravanakumar Priya, Siva Mariappan, Sivakumar Rajarathinam, Suresh Namasivaya, Annadurai Narayanan, Dr.Mary Manuel, Bamiela Venkat, Dhandapani Kuppuswamy, M Manickam, Ravikumar & Vinopriya, Raja (MP Siva), Wordsworth  Ayyadurai, Dr. Chinnathurai & Vijaya, Karunanithi, Malarselvan, Sudhakar Sivaraman, Shripriya Senthilkumar, Rajinikanth, Gorky Kumaresan, Anandan Lakshmi, Arivuponni Ezhilvadivan, Bhuvana Baskar, Jayaprakash Francis (Daisy), Jeeva Sivaraman, Murugesan Thangaraju, Paulson David, Ramanathan Maran, Ramesh Pappannan, Sankar, Senthilnathan, Senthilnathan Muthusamy, Sornam Sankarapandi, V.J.Babu, Venkat R, Aananthi  Subbiah, Elias Jeyarajah, Karu Manickavasagam, Kumanan Murugesan, Neelan, Sabiha Majid - Sabir Mohammed, Veeramuthu, John Britto, Kanak Natarajan, Vinodhini Amit

உதவியாளர்கள் : பிஞ்சுகள்:

இளங்கதிர் இளமாறன், நிக்கில் முனியப்பன்

இளைஞர்கள்:

எழிலன், மாசிலன் மணவாளன், அறிவழகன் கருணாநிதி, அமிர்தா அறிவழகன், புயல், இளமாறன், பிரபு, துரைக்கண்ணன், ஆசிப்.

அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு;  நன்றி!!

No comments:

Post a Comment