பச்சைக் காய்கறி மேல் இச்சையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

பச்சைக் காய்கறி மேல் இச்சையா?

பொதுவாக காய்கறிகளை அள வுக்கு அதிகமாக சமைத்து சாப்பிடக் கூடாது. அப்படி சமைத்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டும் பலர் காய்கறி களை பச்சையாக சாப்பிடுகிறார்கள். ஆனால் அனைத்து காய்கறிகளையும் பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா? குறிப்பாக சில காய்கறிகள் சமைத்து சாப்பிடும் போது தான் மிகவும் சத்தானவை.

சில காய்கறிகளை பச்சையாக சாப் பிடும் போது, அது செரிமான பிரச்சினை களுக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் புழுக்கள் வர வாய்ப்புள்ளது. உணவு களை சமைத்து அல்லது சூடாக சாப்பி டும் போது செரிமானம் எளிதாக நடக் கும் மற்றும் புழுக்கள் அழிக்கப்படும். 

சிலர் செரிமான பிரச்சினையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அத்தகையவர்கள் சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடக்கூடாது. இல்லா விட்டால், அது நிலைமையை மோச மாக்கிவிடும். 

உருளைக்கிழங்கை எப்போதும் வேக வைத்தோ அல்லது வேறு ஏதே னும் சமையல் முறையிலோ சமைத்து தான் சாப்பிட வேண்டும். பச்சையாக மட்டும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் உருளைக்கிழங்கில் செரிமானத்திற்கு இடையூறு செய்யும் மாவுச்சத்து உள்ளது. எனவே சமைக்கும் போது உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து உடைக்கப்பட்டு எளிதில் செரிமான மாகிறது. பச்சையாக சாப்பிட்டால் வயிற்று உப்புசம் மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

காளான்கள் ஆரோக்கியமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், காளானை பச்சையாக சாப் பிட்டால், அது செரிமான பிரச்சினை களுக்கு வழிவகுக்கும். சில வகையான காளான்களை பச்சையாக சாப்பிட்டால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை யும் மோசமாக பாதிக்கும். சமைப்பதன் மூலம், அதில் உள்ள தீங்கு விளை விக்கும் பொருட்கள் உடைத்தெறியப் படுகிறது.

கத்தரிக்காயை பச்சையாக சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதில் பாதுகாப்பற்ற பொருளான சோலனைன் உள்ளது. பெரும்பாலும் இந்த சோலனைன் ஆரம்பத்தில் அறுவடை செய்த கத்த ரிக்காயில் அதிகளவில் இருக்கும். பச் சையாக கத்தரிக்காயை சாப்பிடும் போது, அது இரைப்பை குடல் பிரச்சி னைகள் மற்றும் உணவு ஒவ்வாமையை (புட்பாய்சன்) ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க, கத்தரிக்காயை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

காலிஃப்ளவர் மற்றும் ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அடிப்படையா கவே செரிமான மண்டலத்தால் ஜீரணிப் பதற்கு கடினமாக இருக்கலாம். அதுவும் இவற்றை பச்சையாக சாப்பிடும் போது, அதில் உள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கற்களை உருவாக்குவதோடு, அதிகள வில் உண்ணும் போது அது இரும்புச் சத்து மற்றும் கால்சியம் உறிஞ்சுவதைத் தடுக்கிறது. எனவே இவற்றை பச்சை யாக உண்ணாதீர்கள்.

பசலைக்கீரையை பலரும் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடுவதுண்டு. பச லைக்கீரையை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பற்றது அல்ல. இருப்பினும், பசலைக்கீரையை சமைத்து சாப்பிடுவ தனால் அதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை உடலுக்கு எளிதில் கிடைக்கும். எனவே இந்த கீரையின் முழு சத்தையும் பெற விரும்பினால், பச்சையாக சாப்பிடாமல் சமைத்து சாப்பிடுங்கள்.

பலருக்கு முட்டைக்கோஸை பச் சையாக சாப்பிடப் பிடிக்கும். ஆனால் முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிட் டால், அது தைராய்டு சுரப்பியின் செயல் பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். எனவே முட்டைக்கோசை சமைத்து சாப்பிடுங்கள்.

பொதுவாகவே காய்கறிகளை நன் றாக கழுவி வைத்த பிறகும் ஈரப்பதம் காரணமாக ஒரே இரவில் பூஞ்சைகள் மற்றும் சில நுண்ணுயிரிகள் உருவாகி இருக்கும், தற்போதைய வாழ்வு முறை யில் ஒவ்வாமை மிகவும் விரைவில் பாதிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

No comments:

Post a Comment