இளம் தொழில் முனைவோர்கள்மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

இளம் தொழில் முனைவோர்கள்மூலம் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்

சென்னை, செப்.21 இளம் தொழில் முனைவோர் ஸ்டார்ட் அப்களைத் தொடங்கவும் அதன் மூலம் லட்சக் கணக்கான வேலை வாய்ப்புகளை வரும் ஆண்டுகளில் உருவாக்கவும் சென்னையைச் சேர்ந்த பில்லியனர் வென்ச்சர் இன்குபேஷன் நிறுவனம் டி.பி.எஸ். வங்கி யுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் முதல் கட்டமாக உருவாக்கப்படும். 200 மில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.1,600 கோடி)  டி.பி.எஸ். வங்கி மூலமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவ னங்களும் மூலதன உதவி வழங்க முதல் கட்டமாக  முடிவு  செய்யப்பட்டுள்ளது என பில்லியனர் வென்ச்சர் நிறுவ னத்தின் இயக்குநர்கள் குழு உறுப்பினர் டாக்டர் சுபாஷ் சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணி மூலம் நாட்டில் பொதிந்துள்ள அறிவு வளத்தை சரியாகக் கண்டறிந்து அதன் மூலம் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு அதிக பங்க ளிப்பை அய்.அய்.டி. பட்டதாரிகள் உள்ளிட்ட பிறர் நடத் தும் ஸ்டார்ட் அப் வாயிலாக உருவாக்குவதே நோக்கமாகும் என டி.பி.எஸ். வங்கியின், பிராந்தியத் தலைவர் சரண்குமார் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment