பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகனுக்கு கோயிலா? நூலகமே தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகனுக்கு கோயிலா? நூலகமே தேவை!

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

பெங்களூரு, செப்.12- பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளையார் கோவில் கட்டும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு பல் கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

பாஜக ஆட்சி நடக்கும் கருநாடகத்தில், பெங்களூரு மாநகராட்சியானது, பல் கலைக் கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக இந்தப் பிள்ளையார் கோவிலை கட்டுவது தங்களின் படிப்புச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும் என மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

அதிகாரிகள் சட்ட விரோதமாக இந் தக் கோவிலைக் கட்டி வருவதாகவும், பல்கலைக்கழக, வளாகத்தில் இந்தக் கோவில் தேவையற்றது எனவும் அவர் கள் கூறியுள்ளனர். மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கோவிலின் கட்டுமானத்தை தடுத்து நிறுத்தியிருக்கும் பல்கலைக்கழக நிர்வாகம், இதுபோன்ற விவகாரங்களில் மாணவர்களிடம் கலந் தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. எனினும், பல்கலைக் கழகத்தில் காவல்துறையினர் பாதுகாப்புடன் பிள்ளையார் கோவில் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதி காரிகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தவும் மாணவர்கள் முடிவெடுத் துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கல்புர்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரியங்க் கார்கே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 

அதில், “தங்களுக்கு வசதியான உள் கட்டமைப்பும், தரமான நூலகமும் வேண் டும் என பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கூறுகின் றனர்.  மேலும், மதம் சார்ந்த நிகழ்வுகள் தங்களின் பல்கலைக் கழகத்தில் தேவை யில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால், யாரிடமும் ஆலோசிக்காமலும், வழி முறைகளை முறையாக பின்பற்றாமலும் அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது” என்று பிரியங்க் கார்கே விமர்சித்துள்ளார்.


No comments:

Post a Comment