இது பெரியாழ்வார் மண்! - 'பெரியார் மண்' என்று சொல்லி பெரியாழ்வாரை மறைக்கப் பார்க்கிறார்கள்! - தமிழிசை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 16, 2022

இது பெரியாழ்வார் மண்! - 'பெரியார் மண்' என்று சொல்லி பெரியாழ்வாரை மறைக்கப் பார்க்கிறார்கள்! - தமிழிசை

யார் இந்த பெரியாழ்வார்?

பாண்டிய மன்னனுக்கு வந்த ஒரு  டவுட்ட கிளியர் பண்ணி அவுரு குடுத்த யானை மேல் அமர்ந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம் ஆழ்வார். 

அந்த நேரத்தில் திருமால் அவரோட பொண்டாட்டியோட வானத்துல கருட வாகனத்துல குந்திக்குனு போயிருக்கார். கருட வாகனம்னா அது ஏதோ ஒருவகை ஜெட் விமானம்னு நினைச்சுடப்போறீங்க. நீங்க அன்றாடம் பார்க்கும் பருந்துதான். 

(அந்த இரண்டு கிலோ பருந்து மேலதான் பெருமாள் பொஞ்சாதியோட குந்திக்கினு போனார். நான் அதை பார்த்தேன்னு ஆழ்வார் சொன்னா, அது எப்படி? வெயிட்டுல பருந்துக்கு குண்டி பிதுங்கி குடல் வெளிய வந்துடாதா?ன்னு குறுக்குக் கேள்வி கேட்கப்படாது.)

அத நம்ம ஆழ்வார் பார்க்க, அடடா! இந்த ஜோடி இவ்வளவு சோக்காக்கீதே. ஊரு கண்ணு பட்டா என்ன ஆகும்னு நினைச்சு, பெருமாளுக்கே திருஷ்டி கழிக்க ஒரு பாட்ட அவுத்து உட்டுருக்கார். பக்தர்கள் அந்த பாட்டுல மயங்கி இவர பெரியாழ்வார்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்களாம். 

திருமாலுக்கு பக்தி பாமாலையா பொழிந்த பெரியாழ்வார் தன் வளர்ப்பு பெண்ணை மூத்தாள் இருந்தும் திருமாலோட சேர்த்து வச்சுருக்கார். 

அந்த பெரியாழ்வார சிலாகிச்சுத்தான் நம்ம தமிழிசையக்கா இது பெரி யாழ்வார் மண்! இது பெரியாழ்வார் மண்!!ணுன்னு புலம்பிகிட்டு திரியுறாங்க.

எவ்வளவு பெரிய  பக்தகோடியாக இருந்தாலும், பெண்ணை பெற்ற பெற்றோரிடம், "உங்க பெண்ணை கடவுளுக்கு கல்யாணம் பண்ணி வைப்பீர்களா?" என்று கேட்டுப்பாருங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள். வளர்ப்பு மகளே ஆனாலும் அதற்கு ஒப்புவார்களா? என்று யோசியுங்கள். 

"போடா பைத்தியக்காரா!" என்றுதான் சட்டென பதில் வரும்.

விதவை மறுமணம், பெண் கல்வி, சொத்துரிமை என பெண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடியவர் பெரியார். இன்று தமிழிசைகள் இந்தளவுக்கு உயர காரணமாக இருந்தவர் பெரியார். கிஞ்சித்தும் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்காது இது பெரியாழ்வார் மண் என்று பேசிக்கொண்டிருக்கிறார். வெட்கம். வேதனை.

உய்வில்லை செய்ந்நன்றி 

கொன்ற மகற்கு! 

 - கி.தளபதிராஜ்


No comments:

Post a Comment