ஆ.இராசாவுக்கு மிரட்டலா? கே.சுப்பராயன் எம்.பி., கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

ஆ.இராசாவுக்கு மிரட்டலா? கே.சுப்பராயன் எம்.பி., கண்டனம்

சென்னை, செப்.22 மக்களவை உறுப் பினரும், ‘ஜனசக்தி' ஆசிரியருமான திருப்பூர் கே.சுப்பராயன், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், மக் களவை உறுப்பினருமான ஆ.இராசா மீது சங் பரிவார்கள் பரப்பும் அவ தூறைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அண்மையில் சில நாள்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா வுக்கு எதிரான அடிப்படையற்ற, வஞ்சக மிரட்டல்கள் அதிகரித்து வரு கின்றன!

திசை திருப்பல்

இவற்றை வழிநடத்தி வளர்ப்ப வர்கள், தமிழ்நாட்டில் பல பெயர்களில் இயங்கிவருகிற சங்கிகளின் அமைப் புகள்தான்! இந்த நடவடிக்கைகள் வஞ்சகம் நிறைந்தவை; உள்நோக்கம் கொண்டது; தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதோடு திசைதிருப்புவதுமாகும்! 

"பெரும்பான்மை தமிழ்மக்களை எப்படி வேசி மக்கள் என்று மனுசாஸ்திரம் சொல்லலாம்?" என்று நியாயம் கேட்டால், நியாயம் கேட்ட இராசா,"வேசி மக்கள்" என்று  சொன்ன தாக எதிர்க் குற்றம்சாட்டி, நயவஞ்சகமாக பிரச்சினையைத் திசை திருப்புவது திருட்டுத்தனமல்லவா? சாஸ்த்திர ரீதியான, சனாதன (அ) தர்ம வழிமுறைகள், எவ்வாறு கோடிக் கணக்காக பட்டியலினப்படுத்தப்பட் டுள்ள, பிற்படுத்தப்பட்டுள்ள, மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள ஜாதி சார்ந்த தமிழ் மக்களை, பல ஆயிரம் ஆண்டு களாக வேசி மக்கள் என இழிவுபடுத்தி ஒடுக்கிவைத்திருப்பதை, பாதிக்கப் பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் நன்கு அறிய தெரிவித்து, விழிப்பூட்டுவதை, மிரட்டித் தடுத்து நிறுத்துகிற, பணிய வைக்கிற முயற்சியில் சங்கிகளின் அமைப்புகள் செயல்படுகின்றன!

ஒருபோதும் அடிபணியாது!

இத்தகைய சட்டவிரோத, ஜன நாயக விரோத, மக்கள் விரோத நிர்ப்பந்தங்களுக்கு இடதுசாரி இயக் கங்களும், கம்யூனிஸ்டுகளும், திரா விட இயக்கங்களும் ஒருபோதும் அடிபணியாது!

தொடர்ந்து எதிர்த்துப் போராடும் என்பதை உறுதிபட பிரகடனம் செய்கிறோம்!

- இவ்வாறு அவர் தம் அறிக் கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment