கலவரங்களின் மூலம் பதற்றத்தையும், மோதலையும் உருவாக்க பா.ஜ.க. திட்டம் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

கலவரங்களின் மூலம் பதற்றத்தையும், மோதலையும் உருவாக்க பா.ஜ.க. திட்டம் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தல்

சென்னை,செப்.24- இந்திய கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

சமூக நல்லிணக்கத்தோடும், ஒற்றுமையோடும் மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக் கத்துடன் ஒரு கலவர நெருப்பை பற்ற வைக்கும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.ராசா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை மட்டும் திரித்து வெளி யிட்டு, அதன் மூலம் மக்களிடம் ஒரு குழப்பத்தையும். பதற்றத்தையும் ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது. மனுஸ் மிருதியின் உள்ளடக்கம் குறித்து ஆ.ராசா பேச்சை முன்வைத்து இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டு விட்டதாக ஒரு கட்டுக்கதையை முன்வைத்து பாஜக பல இடங்களில் போராட்டங்கள் என்கிற பெயரில் மதவெறியை தூண்டி, தமிழ் நாட்டை ஒரு கலவர பூமியாக மாற்றவும் முயற்சிக்கிறது. தற்போது வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க  பாஜக சதிசெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இந்து மதத்தினர் இழிவுப்படுத்தப்படுவதாகவும், பாஜகவால்  மட்டுமே இந்து மதம் காப்பாற்றப்படுவதாகவும் அவர்கள் நடத்தி வருகிற போலி நாடகத்தின் ஒரு பகுதியே தற்போது நடைபெறும் போராட்டங்கள் ஆகும். கோவை யில் கலவரத்தை தூண்டக் கூடிய வகையிலும், மக்களிடையே மோதலை உருவாக்கும் வகையிலும் பாஜக மாவட்டத் தலைவர் வன் முறையை தூண்டும் வகையில் பேசி யுள்ளார். ஆ.ராசா மீது கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

கோவை, காரமடையில் ஒரு உணவகத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைத்த காரணத்தினால் அதை பாஜவினர் அடித்து உடைத்துள்ளனர். சென்னையில் சிறுபான்மை இசுலாமிய மாணவர் ஒருவரை மறித்து குல்லாவை கழட்ட வேண்டுமென சொல்லி தாக்கப்பட்டுள்ளார். உத்தமபாளை யத்தில் பள்ளிவாசலுக்கு தொழு கைக்கு சென்று வந்த சிறுபான்மை இஸ்லாமிய மாணவர்களை பள் ளிக்குச் செல்ல விடாமல் தடுத்து பாஜகவினர் தாக்கியுள்ளனர். தேனி யில் தந்தை பெரியார் பிறந்தநாளை கொண்டாடக் கூடாது என்று பிரச்சினை எழுப்பி மோதலை உருவாக்கிட பாஜக முயன்றது. இத்தகைய தொடர்ச்சியான கலவ ரங்களின் மூலம் ஒரு பதற்றத்தையும், மோதலையும் உருவாக்க திட்ட மிட்டு வரும் பாஜகவினரின் மற் றொரு முயற்சியாகவே ஆ.ராசா வின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெறும் போராட்டங் களையும் கருத வேண்டியுள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசின் நாசகாரப் பொருளாதாரக் கொள்கைகளாலும், ஜி.எஸ்.டி. உயர்வு, வேலையின்மை, கடுமை யான விலைவாசி உயர்வு, பெட் ரோல் -டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் உள்ளிட்டு பொது மக்கள் சொல்லொணா துயரங் களுக்கு ஆளாகியுள்ள நிலையில் கடும் கோபத்தில் உள்ள மக்களை பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் உள்நோக்கத்தோடு தான் இத்தகைய போராட்டங்களை பாஜக நடத்தி வருகிறது என்பதை யும் புரிந்து கொள்ள வேண்டும்.

மத வேற்றுமைகளை கடந்து, சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிற தமிழ்நாட்டில் இத்தகைய வெறுப்பு அரசியல் நடவடிக்கைகளை முன் னெடுப்பதன் மூலம் தனது சுயநல அரசியலை கொண்டு செல்ல முயற் சிக்கும் பாஜக உள்ளிட்ட வகுப்பு வாத சக்திகளின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அனைத்து தரப்பினருக்கும் அறை கூவல் விடுக்கிறது.

தமிழ்நாடு அரசும், காவல் துறையும் இத்தகைய மத நல்லிணக் கத்தை குலைத்திட மதவெறி உணர்வுகளை தூண்டும் போராட் டங்களை அனுமதிக்கக் கூடாது எனவும், அத்தகைய நடவடிக் கைகளில் ஈடுபடுவோர் மீது உறுதி யான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை காத்திட முன்வர வேண்டுமெனவும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட் டுக் கொள்கிறது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment