காலை உணவுத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

காலை உணவுத் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை,செப்.24- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த செப்.15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.9.2022) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திட்டத்தின் செயல்பாடு குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா விளக்கினார்.

இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் மணிமேகலையிடம் தொலைப் பேசி வாயிலாக முதலமைச்சர் பேசினார். அப்போது ‘எத் தனை பேர் பள்ளியில் சாப்பிட்டனர், உணவு நேரத்துக்கு வந்ததா, மாணவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டார்களா, ஏதேனும் புகார் இருக்கிறதா? என்று முதலமைச்சர் கேட் டார். தொடர்ந்து,பள்ளியின் தலைமையாசிரியை சுமதி யிடம் பேசிய முதலமைச்சர், தினமும் 36 பேர் சாப்பிடு கிறார்களா? உணவு தரம் நன்றாகஇருக்கிறதா? என்று கேட்ட போது,  அவர்கள் அளித்த பதில்களைக் குறித்துக் கொண்டார்.


No comments:

Post a Comment