பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஏரோ சங்கம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஏரோ சங்கம் தொடக்கம்

வல்லம், செப். 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்  மாணவர்கள் மற்றும் பேராசிரியர் ஒன்று சேர்ந்து தொடங்கிய ஏரோ சங்கம் என்ற சங்கத்தின் சார்பாக கைகளால் செய்யப் பட்ட-வகாகிதத்தால் விமானம் வடிவமைக்கும் பயிற்சியில் நூற் றுக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

இதில் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப புல முதன்மையர் பேரா.எஸ்.செந்தமிழ்குமார், மாணவர் நலப்பிரிவு இயக்குநர் பேராசிரியர் எஸ்.பி.கே.பாபு, விண்வெளி பொறியியல் துறைத்தலைவர் அய்.கார்த்திக் சுப்பிரமணியன் மற்றும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.கே.முத்துராமன் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அச்சங்கத்தின் மாணவர்க்ள காகிதத்தால் வடிவமைக்கப்பட்ட அறிவியல் சிந்தனைகளையும் மற்றும் பயன்பாட்டையும் கற்றுக்கொண்டு காகிதத்தால் வடிவமைக்கப்பட்ட விமா னத்தை பறக்க விட்டு சோதனை செய்தனர்.

ஏரோ சங்கத்தின் மூலம் வரும் நாட்களில் ஏரோ மாடலிங், டிரோன் மற்றும் சிறிய வகை செயற்கைக்கோள்  வடிவமைக்க பயிற்சியும் போட்டிகளும் நடைபெறவுள்ளதாக இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment