கொடநாடு கொலை வழக்கு - புதிய தகவல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

கொடநாடு கொலை வழக்கு - புதிய தகவல்கள்

சென்னை,செப்.4 மேனாள் முதலமைச் சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 

2017ஆ-ம் ஆண்டு ஒரு கும்பல் நுழைந்து காவலாளியை கொலை செய்து, பொருட்கள், ஆவணங்களை கொள் ளையடித்து சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவை சேர்ந்த மனோஜ், சயான் உள்பட பலரை கைது செய்தனர். பின்னர் புலன் விசாரணை முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்த வழக்கை அய்.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மீண்டும் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உத்தர விடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனோஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதில், ஏற்கனவே மூடி மறைக்கப்பட்ட விபத்துகள் குறித்தும், விபத்தில் பலியானவர்கள் குறித்தும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் எதுவும் செய்யக்கூடாது" என்று வாதிட்டார். 

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை நிலை அறிக் கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


No comments:

Post a Comment