செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

செய்தியும், சிந்தனையும்....!

வைத்தியரே உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!

      தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகிறார்கள்.

- எடப்பாடி பழனிசாமி

>> முதலில் அவர்களின் எம்.எல்.ஏ.க்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்!

பக்திப் புத்தி

  மோடியின் பக்தராக மாறுவார் ராகுல் காந்தி.

- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை

>> அதிலும் ‘பக்தி'ப் புத்தி போகலியா?

தகவல் தெரிவிக்கவும்!

கடந்த 18 ஆண்டுகளில் ரூ.200 கோடி காய்கறிகள் ஏழுமலையானுக்கு நன்கொடை.

>> அந்தக் காய்கறியில் ஒன்றையாவது ஏழுமலை யான் சாப்பிட்டானா? தகவல் தெரிவிக்கவும்!

அதுவரை...

  2030 இல் உலகின் 3 ஆம் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.

- நிபுணர்கள் கருத்து

>> அதுவரை ஈரத் துணியை நனைத்து வயிற்றில் கட்டிக் கொள்ளவா?

சாவுக்குப் பெயர்

மோட்சமா?

   மோட்சம் அடைய - கடைசி காலத்தில் தங்கு வதற்கு காசி விசுவநாதர் கோவில் வளாகத்தில் சிறப்பு இல்லம். 

>> முதியோர் இல்லத்துக்கு இப்படி ஒரு பெயரா?

No comments:

Post a Comment