கரோனா 2-ஆவது அலை : ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு - தணிக்கை செய்ய நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

கரோனா 2-ஆவது அலை : ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு - தணிக்கை செய்ய நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு பரிந்துரை

புதுடில்லி, செப்.13 இந்தியாவில் கரோனா 2-ஆவது அலையில் ஆக்ஸிஜன் பற்றாக் குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி அரசு தணிக்கை செய்ய வேண்டுமென நாடாளுமன்ற நிலை குழு பரிந்துரை செய் துள்ளது. நாட்டில் கரோனா 2-ஆவது அலையின்போது அதிக அளவில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. 

இவற்றில் ஆக்ஸிஜன் முறையாக கிடைக்காமல் அவற்றின் பற்றாக்குறையும் காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன என ஊடகச் செய்தி வெளியானது. இதுபற்றி நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதுபற்றி சமாஜ்வாடி உறுப் பினரான ராம் கோபால்  தலைமையிலான அந்த குழு வெளியிட்ட அறிக்கையில், கரோனா 2-ஆம் அலையின்போது பிராண வாயு பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பற்றி ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்கிறோம்.

இதனை கவனிக்காமல் அரசு அலட்சியமுடன் இருப்பது வருத்தம் அளிக் கிறது. அமைச்சகம், மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன், ஆக்சிஜன் பற்றாக் குறை பற்றி தணிக்கை செய்து, கரோனா உயிரிழப்புகளை ஆவணப்படுத்த வேண்டும். அது அரசின் பொறுப்புள்ள உணர்வை வெளிப்படுத்தும். ஒரு முன்னெச்சரிக்கையான கொள்கை உருவாக்கமும் செய்வதுடன், சுகாதார அவசரநிலை ஏற்படும் சூழலில் அதனை எதிர்கொள்ளவும் அது உதவும் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதேபோன்று, கரோனா பாதித்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முறையான இழப்பீடும் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு அரசு முகமைகளிடம் இருந்து அதிகளவில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புணர்வும் எதிர்பார்க்கப்படுகிறது என குழு தெரிவித்து உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என கோரி நீண்ட வரிசையில் நோயாளிகளின் குடும்பத்தினர் நின்ற பல்வேறு சம்பவங்கள் உள்ளன. பல மருத்துவமனைகளில் பிராணவாயு தீர்ந்து விட்டது என்றும் ஒரு சில மணிநேரம் மட்டுமே ஆக்சிஜன் வினியோகிக்க முடியும் என்ற சூழலை தெரிவித்து பல மருத்துவமனைகள் வேண்டுகோள் விடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன என்றும் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை குழு அறிக்கையானது குறிப்பிட்டு உள்ளது. கரோனா 2ஆ-வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உறுதி செய்யப் பட்ட உயிரிழப்புகள் பற்றி தெரிவிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் முன்பு வேண்டுகோள் விடுத்தது. எனினும் 20 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்கள் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அதற்கு பதிலளித்து இருந்தது. எனினும், மாநிலங் களுடன் அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கரோனா 2ஆ-வது அலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை பற்றி தணிக்கை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது.


No comments:

Post a Comment