உத்தராகண்ட் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு; ரூ.200 கோடி சுருட்டிய பாஜக பிரமுகர் கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

உத்தராகண்ட் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு; ரூ.200 கோடி சுருட்டிய பாஜக பிரமுகர் கைது!

டேராடூன், செப்.4  உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்ட ஊராட்சி  உறுப்பினராகவும், பா.ஜ.க.வில் முக்கியப் பிரமுக ராகவும் வலம் வந்த  ஹூக்கம்  சிங் என்பவர் - உத்த ராகண்ட் மாநில ‘பப்ளிக் சர்வீஸ் கமி ஷன்' கடந்தாண்டு 854 பணி யிடங்களுக்கான தேர்வை நடத்திய நிலையில், வினாத் தாள் முறைகேட்டில் ஈடுபட்டு, ரூ. 200 கோடி ரூபாய் அளவிற் குச் சுருட்டியுள்ளார்.

ஒரு வினாத்தாளை ரூ.  10 லட்சம் முதல் 15 லட்சம் வரை யிலான விலைக்கு 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு விற்றுள் ளார். லக்னோவைச் சேர்ந்த டெக்- சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் மூலம் வினாத்தாள் நகல் கசிந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில்தான், இந்த மோசடிக்கு ஹூக்கம் சிங், அவரது நெருங்கிய உதவியாள ரான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கேந்திரபால், சந்தன் மன்ரல்,  மனோஜ் ஜோஷி மற் றும் ஜகதீஷ் கோஸ்வாமி ஆகி யோர் மூளையாக செயல்பட் டுள்ளனர். இவர்கள் மோசடி  செய்த பணத்தில் ரூ. 50 கோடி வரை  சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். தற்போது, ஹூக்கம்  சிங் உட்பட  இது வரை 32 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment