அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் மனிதநேயம் போற்றும் பொது மருத்துவமுகாம் - சான்றிதழ் வழங்கும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் மனிதநேயம் போற்றும் பொது மருத்துவமுகாம் - சான்றிதழ் வழங்கும் விழா

திருச்சி, செப். 24- அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து மருத்துவ முகாமினை 17.09.2022 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை நடத்தியது. 

இதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், குழந்தை நலன், பெண்கள் நலன் கண் பரி சோதனை உள்ளிட்ட பொது மருத்துவ முகாம்கள் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் பெரியார் மணி யம்மை மருத்துவமனை மருத் துவ அலுவலர் மருத்துவர் பி. மஞ்சுளா வாணி வழிகாட்டுத லுடன் சிறப்பு மருத்துவ நிபுணர் குழு பரிசோதனைகளை மேற் கொண்டது.  

இந்நிகழ்ச்சியில் பொது மருத்துவர் சீனிவாசன் மருத்துவ முகாம் குறித்து கருத் துரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த னர். இம்மருத்துவமுகாமினை பெரியார் மணியம்மை மருத்து வமனையின் செவிலியர்கள் மற் றும் பெரியார் மருந்தியல் கல்லூ ரியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் சிறப்பாக நடத் தினர். இதில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செவிலியர் பயிற்சி நிறைவு விழா

அதனைத்தொடர்ந்து, பெரியார் மணியம்மை மருத்து வமனையின் துணை செவிலியர் பயிற்சியின் நிறைவு விழா பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 2022ஆம் ஆண்டில் பயிற்சி முடித்த 12 துணை செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ்களை பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வழங்கி சிறப்பித்தார். மேலும் தமது வாழ்த்துரையில் கல்வியோடு வாழ்வியலையும் கற்றுத் தந்து சமுதாயத்திற்கு தொண்டாற் றக்கூடிய மாணவர்களை உரு வாக்கக்கூடிய பெரியார் கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, துணை செவிலியர் பயிற்சியினை சிறப்பாக முடித்த செவிலிய மாணவர்களுக்கு தமது வாழ்த்து களை தெரிவித்துக் கொண்டார். 

தொண்டற நோக்கோடு...

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் போற்றிய தொண்டற நோக்கோடு சகிப்புத் தன்மை, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றுடன் செயல்படுவ தோடு மட்டுமல்லாமல், தாம் ஏற்ற பணியில் முழு ஈடுபாட் டுடன் செயல்பட வேண்டு மென்று உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் பி. மஞ்சுளா வாணி, செவிலியர் ஹெலன், பணியாளர் சரிதா மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment