தலைமை தாங்கும் தகுதி விடுதலை’க்குதான் உண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

தலைமை தாங்கும் தகுதி விடுதலை’க்குதான் உண்டு

 மாண்புமிகு
மு.க.ஸ்டாலின்|
தமிழ்நாடு முதலமைச்சர்

திராவிடர் கழகத்தின் பணி என்பது 1000 ஆண்டுகளுக்குத் தேவையான பணியாகும். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் தன்னுடைய நிறைவு உரையை முடிக்கின்ற நேரத்தில் குறிப்பிட்டுச் சொன்னது போல், 16 வயது இளைஞனின் உற்சாகத்தோடு அவர் இங்கு இருக்கிறார். இன்னும் பல ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்காக உழைக்கக் காத்திருக்கிறார்.

அவரைப் பார்க்கின்றபோது, எங்களுக்கு ஓர் அதிசயமும், ஆச்சரியமும் வரக்கூடிய அதே நேரத்தில், ஓர் உத்வேகம் வருகிறது. காரணம், இவ்வளவு பயணத்தை எப்படி மேற்கொள்கிறார்? இந்த வயதில் இந்தப் பயணத்தை அவர் எப்படி நடத்துகிறார்? எவ்வளவு நேரம் பேசுகிறார்? எவ்வளவு எழுதுகிறார்? என்பதை நானும் தொடர்ந்து கவனித்து வருகின்றேன். ஆசிரியரின் வயதை நினைத்து நாம் பயப்பட்டாலும், அவர் பயப்படுவது இல்லை. அவரைப் பார்த்து இன எதிரிகள் பயப்படுகின்றார்களே தவிர, அவருக்கு எந்தப் பயமும் கிடையாது.

அண்மையில் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையாக விளங்கும் 'முரசொலி' அலுவலக வளாகத்தில் அவரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தோம். அந்தத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, அய்யா ஆசிரியர் அவர்கள் வரவேண்டும் - தலைமை ஏற்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் எடுத்து வைத்தோம். ‘முரசொலி' அலுவலகத் தில் அந்தச் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடை பெறுகிறது என்றால், அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் தகுதி ‘விடுதலை'க்குதான் உண்டு! 

27.08.2019 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை.  (விடுதலை - 28.08.2019)


No comments:

Post a Comment