இலவசங்களால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நன்மைகள் குறித்து பிரதமர் பேசவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

இலவசங்களால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நன்மைகள் குறித்து பிரதமர் பேசவேண்டும்

1996இல் முத்தமிழறிஞர் கலைஞர் இல வச வண்ணத் தொலைக்காட்சியை அறி விக்கும் போது 14" டிவியின் சந்தை விலை ரூ.5000/-. திமுகவின்  2006-2011களில்  நடந்த 5 ஆண்டு ஆட்சியில் 1,62,59,526 குடும்பங்களுக்கு 3687 கோடி ரூபாய் செலவில் டிவி வழங்கப்பட்டது. அதாவது ஒரு டிவியின் விலை சுமார் ரூ.2200/-. என ஒப்பந்தக் கோரல் முறை மூலம் அரசு வாங்கியதால் மக்களிடம் இருந்து போயி ருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மிச்சமாகி அது புழக்கத்தில் இருந்தது. 

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி பயன்பாடு (ஜீமீஸீமீtக்ஷீணீtவீஷீஸீ) 95% ஆனதால் தமிழில் இத்தனை சேனல்கள் வந்தன. மற்ற மாநி லங்களில் வெறும்  பன்னாட்டு நிறுவனங் களின் விளம்பரங்களே இன்றும் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தமிழ் நாட்டில் மசாலாப்பொருட்கள், சமையல் எண்ணெய் நிறுவனம், பேரீச்சம்பழம் விளம்பரம் போன்றவைகளோடு தங்கம், பட்டு மற்றும் பல்பொருள் அங்காடி  நிறு வனங்களின் அபார வளர்ச்சிக்கு காரணம் வீட்டுக்கு வீடு கலைஞர் கொடுத்த விலை யில்லா வண்ணத்தொலைக்காட்சியால் தான்.  இதற்காகவே பல நூறு அலைவரி சைகள் தமிழ்நாட்டில் உருவாகின. இந்தத் தனியார் சேனல்கள் ஏற்படுத்திய முதலீடு களை கணக்கில் எடுத்தாலே தொலைக் காட்சிக்காக கலைஞர் அரசு  முதலீடு செய்த பணத்தை விட பல நூறுமடங்கு திரும்ப வந்திருந்தது. 

இந்த தொலைக்காட்சிகள் உருவாக்கிய வேலை வாய்ப்புகள் மற்றும் விஸ்காம் கல்வி தான் இன்று யுடியூப் சேனல்களை நடத்து வதில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கு காரணம் எனச் சொன்னால் மிகையல்ல. கலைஞர் தந்தது வெறும் விலையில்லா வண்ணத் தொலைக் காட்சியல்ல -  அனைவருக்குமான சமூக, பொருளாதார முன்னேற்றம்.

அது மட்டும் இல்லை. இந்த திட்டங்கள் எல்லாம் சுழற்சியை ஊக்குவித்தன.. எத் தனையோ வீடுகளில் கலைஞர் டிவி.க்கு பிறகு இன்னும் சிறப்பான டி.வி. பெட்டிகளை வாங்குகின்றனர்.. அது உற்பத்தியை பெருக்கி, வேலை வாய்ப்பை வழங்கு கின்றது.. அதன் மூலம் வரி சேர்கின்றது.

கட்டணமில்லாத பேருந்து பயணம் 

தற்போது பெண்களுக்கு கட்டண மில்லாத பேருந்துப்பயணத்திற்கு விதை போட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான். தமிழ்நாட்டில் பள்ளிக்குச் செல்லாத குழந் தைகளே இருக்கக்கூடாது என்ற வகையில்,  பள்ளிக்கூடங்களுக்கு சென்று படிப்பதற்கு வறுமை ஒரு தடையாக இருந்து விடக் கூடாது என்பதால்தான் சத்துணவு, இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, சீருடைகள், காலணிகள், புத்தகப் பை, கிரையான்ஸ், வண்ண பென் சில்கள், கணித உபகரண பெட்டி, மலைப் பகுதிகளில் கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை, உறை - காலணி, கால் உறை, புவியியல் வரைபடம் என்று பல பொருட் கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுதவிர, அரசு மற்றும் அரசால் அங்கீ காரம் பெற்றுள்ள பள்ளிக்கூடங்களில் 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரசு கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கும், மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வருவதற்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப் படுகிறது.

இந்த பேருந்து பயண அட்டை வழங் கும் திட்டம் 1996-1997ஆம் ஆண்டில் முத லமைச்சராக இருந்த மறைந்த முத்தமிழறி ஞர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது.  உயர்குடியினரைப் போல் ஏழைகள் ரயில் நிலையங்களுக்கு அருகிலும் நகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட குடி யிருப்புகளிலும் வாழமுடியாது. வாய்ப் பில்லாத ஏழைகள் பணத்திற்காக தங்களின் பிள்ளைகளின் கல்வியை இடை நிறுத்தி விடக்கூடாது என்ற உன்னத உயர்நோக்கத் தில் கொண்டுவரப்பட்டதுதான் இலவச பேருந்து பயண அட்டை.

இதன் மூலம் கிடைத்த பலன்கள் ஏராளம், தென் மாவட்டங்களில் தொலை தூரக்கிராமங்களில் கூலிவேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள் நகரங்க ளுக்குச் சென்று படித்து இன்று மருத்து வர்களாகவும், பொறியாளர்களாவும், அதி காரிகளாகவும், வெளிநாடுகளில் பெரும் நிறுவனங்களில் உயர்பதவிகளிலும் அமர்ந் திருப்பது கலைஞர் கொடுத்த இலவச பேருந்து பயண அட்டை மூலம் தான் சாத்தியமானது, 

 இதன் தொடர்ச்சிதான் பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணம். சமீபத்தில் ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில், பணப்புழக்கம் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிகம் உள்ளது என்று கூறியுள்ளது. இதற்கு காரணம் இதுவரை பேருந்து செலவை நினைத்து வேலைக்குச் செல் லாமல் தயங்கி நின்ற பெண்கள் இப்போது கிடைத்த வேலைகளுக்கு செல்கின்றனர். இதன் மூலம் தமிழ்நாட்டின் மனிதவளம் மேம்பட்டதுடன் தொழிற்துறைகளுக்கு திறமையானவர்கள் கிடைத்ததால் தமிழ் நாட்டின் தொழில்வளர்ச்சியோடு பணப் புழக்கமும் அதிகரித்துள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளாதரப் பலன்கள் குறித்த முழு விபரங்களும் வர இன்னும் சில மாதங்கள் காத்திருக்கவேண்டும்.

No comments:

Post a Comment