ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் மதவாத சக்திகளை எதிர்த்து மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள்.

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மின்சார சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்புவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

தனது பதவிக் காலத்தில்  நீங்கள் ஒரு கேள்விக்காவது பிரதமர் மோடி பதிலளிக்க முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் அது நடக்கவில்லை. விவசாய குடும்பத்தில் பிறந்த நீங்கள், வேளாண் மசோதா  நிறைவேற்றப்பட்டபோது அவையில் இல்லை என துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் வெங்கைய்யாவை நோக்கி திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர் டெரக் ஓ பிரையன் கேள்வி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம்,  பா.ஜ.க. கூட்டணி முறிய இருப்பதாக தக வல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக பாட்னாவில் இன்று கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் நிதிஷ் குமார் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தி ஹிந்து:

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டடங்கள் வழக்கு முடிவடையும் வரை நிலம் உயர்நீதிமன்றத்தின் அடையாளக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு. பல்கலைக்கழகத்தின் 31.37 ஏக்கர் ஆக்கிரமிப்பைக் காரணம் காட்டி ஏழை ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றுவதை எதிர்க்கின்றனர் என அரசு தரப்பில் வாதம்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment